தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சி

சென்னை, செப். 19 - உலகத் தலைவர் பகுததறிவுப்பகலவன் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் நன்றி பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை பெரியார் திடலில் 17.9.2023 அன்று முழு நாள் கொண்டாட்ட நிகழ்வாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 17.9.2023 பிற்பகல் நிகழ்வாக லிபர்டி கிரியேஷன்ஸ தயாரிப்பில் இயக்குநர் ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் இனமுரசு சத்யராஜ் நடிப்பில் உருவான ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தைபெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக  சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் வழங்கிய இன எழுச்சிப் பறை முழக்கம், பெரியார் பிஞ்சுகளின் சிலம்பாட்டம் மற்றும் வீரவிளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து அரங்கத்திலும் பறை முழக்கம் ஒலிக்கப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. பறை முழக்கமிட்ட குழுவினரையும், சிலம்பாட்டம் நிகழ்த்திய பிஞ்சுகளையும் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டினார். அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ் வரவேற்க, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் அடுத்த நிகழ்வாக சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது.... பண் பாட்டு வெளியில்... அரசியல் உலகில்... எனும் தலைப்பில் பட்டிமன்றம், செல்லா செல்லம் எழுத்தில்,சந்தோஷ் செல்லம் இயக்கத்தில் செல்லம் கலாலயம் குழுவினரின் ‘சமன்’ நாடகம் நடைபெற்றது.

கவிஞர் நந்தலாலாவை நடுவராகக் கொண்டு நடை பெற்ற பட்டிமன்றத்தில்,  சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது.... பண்பாட்டு வெளியில்... எனும் தலைப்பில் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், வழக்குரைஞர் பா.மணியம்மை, எழுத்தாளர் தீபலெட்சுமி ஆகியோரும், சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது.... அரசியல் உலகில்... எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘யூ டூ புரூட்டஸ்’ மைனர் வீரமணி, பேராசிரியர் தா.மீ.நா.தீபக் ஆகியோரும் வாதுரைகளை முன்வைத்தனர். இரண் டிலுமே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காரணங்களை விளக்கி நடுவர் தீர்ப்புரை வழங்கினார்.

கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பட்டிமன்ற குழுவின ருக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தந்தைபெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை மலரை பட்டிமன்றக் குழுவினருக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வழங்கினார். சமன் நாடகக் குழுவின ரைப்பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார். நாடகக் குழுவினர் அனைவரும் தமி ழர் தலைவர் ஆசிரியருடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். முழு நாள் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையில் தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். தந்தை பெரியார் பிறந்த நாள் பேருரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

சிறப்புரையில் ஒன்றிய பாஜக அரசின் குலக்கல்வித் திட்டமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டக் களம் காண தயாராகவேண்டும், அதனை விரட்டியடிப்போம் என போர்முழக்கத்தை ஒலித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தந்தைபெரியார் பிறந்த நாளில் பலராலும் தீட்டப்பட்ட ஓவியங்களுக்கிடையே தந்தைபெரியார் உருவம் கொண்ட பதாகை மேடையில் அனைவரின் கரவொலி களுக்கிடையே திறக்கப்பட்டது. தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார். துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். தென்சென்னை, வடசென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம், ஆவடி, திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் பொறுப்பா ளர்கள்,  பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்பட பலரும் குடும்பம் குடும்பமாக விழாவில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment