திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 திரிபுவாதம் தவறு என்று கண்டுபிடிக்கும்பொழுது அதற்குப் பரிசு அளிப்பதற்குப் பதிலாக, தண்டனை கிடைக்கக் கூடிய காலமாக மாறிக் கொண்டிருக்கிறது

அந்தக் காலங்கள் மாற்றப்படவேண்டும்; ஆய்வுகள், உண்மைகள் கள பலியாகக் கூடாது- அதற்கு உங்கள் அறிவும், ஆய்வும் தேவை!

சென்னை, ஆக.11 திரிபுவாதம் தவறு என்று கண்டு பிடிக்கும்பொழுது அதற்குப் பரிசு அளிப்பதற்குப் பதிலாக, தண்டனை கிடைக்கக் கூடிய காலமாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலங்கள் மாற்றப்பட வேண்டும். ஆய்வுகள், உண்மைகள் கள பலியாகக் கூடாது. அதற்கு உங்கள் அறிவும், ஆய்வும் தேவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இந்திய வரலாற்றின்மீதான 

திரிபுவாதத் தாக்குதல்’’

கடந்த 4.8.2023 காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், ‘‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி  வருமாறு:

Prof.M.Habib says:

‘‘It is true, that Muslim kings, mostly foreign extraction sat on Indian thrones for some six or seven centuries. But they could do so because their enthronement was not the enthronement of the Muslim rule. Had it been otherwise they could not have lasted for a single generation.’’

Now, let me give a few illustrations as to how the historical facts have been distorted.

while I was doing some research on Tippu Sultan in 1928 at Allahabad, some office-bearers of Anglo-Bengali College Students’ Union approached me with a request to inaugurate their History Association. They had directly come from the college with their text - books. Incidently, I glanced through their history text book. I opened the chapter on Tippu Sultan. One of the sentences that struck me deeply, was:

“Three thousand Brahmins commited sucide as Tippu wanted to convert them forcibly into the fold of Islam”

The author of the text-book was Mahamahopadhyaya Dr.Har Prashad Shastri, Head of the Department of Sanskrit, Calcutta University. I immediateiy wrote of Dr. Shastri for the source of his information. After many reminders came the reply that he had taken that fact from the Mysore Gazetteer. The Mysore Gazetteer was not available either at AIlahabad or at the imperial Library, Calcutta. So I wrote to Sir Brijendra Nath Seal, the then Vice Chancellor of Mysore Univeisity seeking a confirmation of the statement of Dr. Shastri. Sir Brijendra Nath Seal forwarded my letter to Prof. Srikantia, who was-then busy editing a new edition of the Mysore Gazetteer.

Prof. Srikantia informed me that the episode of the suicide of 3,000 Brahmins is nowhere in the Mysore Gazetteer and he, as student of history of Mysore, was quite certain that no such incident had taken place. He further informed me that the Prime Minister of Tippu Sultan was a Brahmin, named Purnea and his Commander-in-Chief was also a Brahmin, named Krishna Rao. He supplied me with the list of 156 temples to which Tippu Sultan used to pay annual grants. He sent me 30 photostat copies of Tippu Sultan’s letters addressed to the Jagadguru Shankaracharya of Sringeri Math with whom Tippu Sultan had very cordial relations. Tippu Sultan, as was customary with the rulers of Mysore, daily visited the temple of Lord Ranganatha located inside the fort of Srirangapatnam before taking his breakfast. Prof.Srikantia suggested that Dr.Shastri might have based his narrations on the so-called ‘‘History of Mysore’’, by Col. Miles, who claimed to have translated his ‘‘History of Tippu Sultan’’ from a Persian manuscript which was said to be in the personal Library of Queen Victoria. On investigation, it was found that there was no such manuscript in the library of Queen Victoria, most of the facts in Col. Miles’s history book were concocted and false.

Dr. Shastri’s book was approved as a course book of  history for High Schools in Bengal, Assam, Bihar, Orissa, U.P., M.P. and Rajasthan. I approached  Sir Ashutosh Chaudhary, the then Vice - Chancellor of Calcutta University and sent him all the correspondence that I had exchanged with Dr. Shastri, with Mysore University, Vice Chancellor, Sir Brijendra Nath Seal, and Prof. Srikantia, with the request to take proper action against the offending passages in the text-book. Prompt came the reply from Sir Ashutosh Chaudhary,  that the history book by Dr.H.P.Shastri has been put out of course.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பேராசிரியர் எம்.ஹபீப்

பேராசிரியர் எம்.ஹபீப் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

அயல்நாடுகள் பலவற்றிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்கள் ஆறேழு நூற்றாண்டுகளாக இந்திய சிம்மாசனங்களில் கொலுவீற்றிருந்தது உண்மை தான். எனினும், அது உண்மையில் முஸ்லிம் ஆட்சி அல்ல. அப்படி இருந்திருந்தால், அவர்களுடைய ஆட்சி ஒரு தலைமுறைக்குமேல் கூட நீடித்திருந்திருக்காது.

வரலாற்று உண்மைகள் எப்படியெல்லாம் திரிபுக்கு ஆளாகியுள்ளன என்பதை சில உவமைகளுடன் இச்சபையினருக்கு விளக்கட்டுமா?

1928 ஆம் ஆண்டில் அலகாபாத் நகரில் திப்புசுல்தான் பற்றிய ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தேன். ஆங்கிலோ - பெங்காலி கல்லூரியின் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்துத் தங்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை அமைப்பைத் திறந்து வைக்க அழைத்தனர். பாடப் புத்தகங்களைச் சுமந்துகொண்டு, கல்லூரியிலிருந்தே நேராக என்னிடம் வந்திருந்தனர். எதேச்சையாக அவர்களுடைய பாடப் புத்தகம் ஒன்றைக் கவனித்தேன். திப்புசுல்தான் பற்றிய அத்தியாயத்தைப் புரட்டினேன். ஒரு குறிப்பிட்ட வரி என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

அது,

‘‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி திப்புசுல்தான் கட்டாயப்படுத்தியதால் மூவாயிரம் பார்ப்பனர்கள் தற்கொலை செய்துகொண்டனார்கள்'' என்ற வரிதான்.

குறிப்பிட்ட அந்தப் பாடப் புத்தகத்தின் ஆசிரியர் சமஸ்கிருதத் துறைத் தலைவர் மகா மகோபாத்யாயா முனைவர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

எதை ஆதாரமாகக் கொண்டு அந்தத் தகவலை எழுதினீர்கள் என்று கேட்டு முனைவர் ஹரிபிரசாத் அவர்களுக்கு நான் அன்றே கடிதம் எழுதினேன். பல நினைவூட்டுக் கடிதங்களுக்குப் பின் ஒரு வழியாக அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது.

ஹரிபிரசாத் குறிப்பிட்ட தகவல் உண்மையானதுதானா?

மைசூர் அரசு அறிக்கை இதழிலிருந்து அந்தத் தகவலை எடுத்ததாக எழுதியிருந்தார். அந்த அரசிதழ் வெளியிட்ட அதிகாரியை நான் தேடினேன். அவர் அலகாபாத்திலும் இல்லை, கல்கத்தாவிலும் இல்லை. குறிப்பிட்ட  அந்த அரசிதழ் கல்கத்தாவில் உள்ள இம்பீரியல் நூலகத்திலும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மைசூர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பிரஜேந்திரநாத் என்பவருடன் தொடர்புகொண்டு, ஹரிபிரசாத் குறிப்பிட்ட தகவல் உண்மையானதுதானா என்று கேட்டேன். துணைவேந்தர் என் கடிதத்தைப் பேராசிரியர் சிறீகன்சியா என்பவருக்கு அனுப்பி விட்டார். அந்த சிறீகன்சியா மைசூர் அரசிதழின் புதிய வெளியீட்டுப் பணியில் ஓய்வின்றி மூழ்கி இருந்துள்ளார்.

அது உண்மையல்ல என்றும், பொய்யான தகவல் என்றும் 

தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்!

ஒருவழியாக பேராசிரியர் சிறீகன்சியாவிடமிருந்தே எனக்குப் பதில் கடிதம் வந்தது. அது உண்மையல்ல என்றும், பொய்யான தகவல் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என்று எழுதியிருந்தார். மேலும், திப்புசுல்தானின் பிரதம மந்திரியாக இருந்தவரே ஒரு பார்ப்பனர் என்றும், அவர் பெயர் புர்ணியா என்றும் குறிப்பிட்டிருந்தார். திப்புசுல் தானின் படைத் தளபதியும் கிருஷ்ணா ராவ் என்ற பார்ப்பனர் என்ற கூடுதல் தகவலும் அந்தக் கடிதத்தில் இருந்தது.

பேராசிரியர் சிறீகன்சியா 156 கோவில்களின் பெயர்களையும் பட்டியலிட்டிருந்தார். ஆண்டுதோறும் திப்புசுல்தான் நிதி வழங்கி வந்த கோவில்கள் அவை. அந்தப் பேராசிரியரே ஒரு வரலாற்றுத் துறை மாணவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிருங்கேரி மடத்தின் ஜெகத்குரு சங்கராச்சாரிக்கு திப்புசுல்தான் எழுதியிருந்த முப்பது கடிதங்களின் நகல் களையும் பேராசிரியர் சிறீகன்சியா இணைத்திருந்தார். சங்கராச்சாரியுடன் திப்புசுல்தானுக்கு மட்டுமல்ல, அவரு டைய தந்தை அய்தர் அலிக்கும் நெருங்கிய தோழமை இருந்துள்ளதை பேராசிரியரின் கடிதம் விவரித்திருந்தது.

மைசூர் ஆட்சியாளர்களின் வழக்கப்படி திப்புசுல் தான் தினமும் சிறீங்கப்பட்டினக் கோட்டைக்குள் அமைந்திருந்த ரங்கநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தவறாமல் வழிபட்டு வந்துள்ளார். காலைச் சிற்றுண்டிக்கு முன்பே அங்கே வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது.

கர்னல் மைல்ஸ் எழுதிய 

தகவல்கள் பெரும்பாலும் பொய்யானவை - அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகள்!

கர்னல் மைல்ஸ் என்பவர், ‘‘மைசூரின் வரலாறு'' என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். ஒருவேளை அதை ஆதாரமாகக் கொண்டு ஹரிபிரசாத் அப்படி குறிப்பிட்டிருக்கலாம் என்றும், தன் யூகத்தைக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார் பேராசிரியர் சிறீகன்சியா. யார் இந்த கர்னல் மைல்ஸ்? விக்டோரியா மகாராணியின் நூலகத்தில் ‘‘திப்புசுல்தானின் வாழ்க்கை வரலாறு'' என்ற தலைப்பில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட கைப்பிரதி ஒன்று இருந்ததாம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவராம் இந்த கர்னல் மைல்ஸ். இதுகுறித்து நான் தொடர்ந்து புலனாய்வு செய்தேன். விக்டோரியா மகாராணியின் நூலகத்தில் அப்படியொரு கைப்பிரதி இருந்ததே இல்லை என்ற உண்மை வெளிப்பட்டது. கர்னல் மைல்ஸின் நூலில் இடம்பெற்ற தகவல்கள் பெரும்பாலும் பொய்யானவை என்பதும், அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகள் என்பதும் தெளிவாயிற்று.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார், அஸ்ஸாம் மற்றும் வங்க மாநிலத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முனைவர் ஹரிபிரசாத் சாஸ்திரியின் அந்த நூல் வரலாற்றுப் பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சி யளிக்கிறது.

கல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அஷுதோஷ் சவுத்திரி

கல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தர் அஷு தோஷ் சவுத்திரியுடன் நான் தொடர்புகொண்டேன். என்னிடமிருந்த எல்லா கடிதங்களின் நகல்களையும், நான் அதுவரை தொடர்பு கொண்டிருந்தவர்கள் அனுப்பியிருந்த அத்துணை ஆவணங்களின் நகல் களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். ஒன்றையும் விட்டுவிடாமல் அனுப்பினேன். பாடப் புத்தகத்தில் நான் கண்ட திரிபுகள் அடங்கிய பகுதிகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி துணைவேந்தர் அஷுதோஷ் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவரிடமிருந்து விரைவில் எனக்கு பதில் கடிதம் வந்தது. கல்கத்தா பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய அந்தப் பாடப் புத்தகம், பாடத் திட்டத் திலிருந்தே அகற்றப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித் திருந்தார். துணைவேந்தர் அஷுதோஷ் சவுத்திரி வியக்கத்தகு பொறுப்புணர்ச்சியுடன் தெளிவாக விளக்கமளித்திருந்தார்.

அன்றைக்கு நியாயமானவர்கள் இருந்தார்கள்; அதனால் நீதி கிடைத்தது. ஆனால், இன்றைக்கு அதுபோன்று ஒருவர் எழுதினால், ஒருவேளை அவர், அடுத்த குடியரசுத் தலைவராக மாறினாலும் மாறுவார்.

ஆய்வுகள், உண்மைகள் 

கள பலியாகக் கூடாது

எனவே, திரிபுவாதம் தவறு என்று கண்டுபிடிக்கும் பொழுது அதற்குப் பரிசு அளிப்பதற்குப் பதிலாக, தண்டனை கிடைக்கக் கூடிய காலமாக மாறிக் கொண் டிருக்கிறது. அந்தக் காலங்கள் மாற்றப்படவேண்டும். ஆய்வுகள், உண்மைகள் கள பலியாகக் கூடாது. அதற்கு உங்கள் அறிவும், ஆய்வும் தேவை!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment