உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்


உரத்தநாடு, ஆக. 31
- உரத்த நாடு ஒன்றிய நகர திரா விடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் அவர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்  21.8.2023 அன்று மாலை நடைபெற்றது.

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் நகர கழகத்தினுடைய செயலா ளர் ரஞ்சித் குமார் வர வேற்றார். 

ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாநல்.பரமசிவம் தலைமையேற் றார். மாவட்ட  செயலா ளர் அ.அருணகிரி ஒன் றிய தலைவர் த. ஜெகநா தன் ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார் நகரத் துணைச் செயலா ளர் இரா.ராவணன் ஆகி யோர் முன்னிலை  ஏற்றனர். 

நிகழ்ச்சியின் தொடக் கத்தில் க.சுடர் வேந்த னின் மந்திரமா தந்திரமா  நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தினை தொடங்கி வைத்து மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்  உரையாற் றினார். 

திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை. இரா.பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வே.ராஜ வேல், மாவட்ட இளைஞ ரணி தலைவர் ரெ.சுப்பிர மணியன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒன்றிய விவசாய அணி தலைவர்  மா. மதியழகன், ஒன்றிய விவசாய அணி செயலா ளர் க.அறிவரசு, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.நேரு, கிழக் குப் பகுதி செயலாளர் துரை.தன்மானம், நகரத் துணை தலைவர் மு.சக்தி வேல், ஒன்றிய இளைஞ ரணி செயலாளர் சு.குமர வேல், திராவிட முன் னேற்ற கழகத்தைச் சேர்ந்த தஞ்சை வழக்குரைஞர் சங்க பொருளாளர் தவ. ஆறுமுகம், தெலுங்கு குடிக்காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, புதூர் உலகராசன், புதூர் துரை. செந்திக் குமார், மண்டலக் கோட்டை  கிளைக் கழக செயலாளர் சிவக்குமார், ஊரச்சி நடராஜன், உரத்தநாடு புவனராஜா, இளைஞர் அணி சதீஷ்குமார், திராவிடர் கழக   தோழர்கள் உரத்த நாடு சசிகுமார்,  ஒக்கநாடு மேலையூர் ம. மணி, பொறியாளர் ப.பால கிருஷ்ணன், கிளைக் கழகச் செயலாளர் நா. வீரத்தமிழன், மா.தென்ன கம், வெ.சக்திவேல், ஆ.ராசாகாந்தி, மண்டல கோட்டை செந்தில் குமார் உள்ளிட்ட ஏரா ளமான பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இறுதியில் நகர இளை ஞரணி துணை செயலா ளர் க.மாதவன் நன்றி கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட  சிறப்பு அழைப்பாளர்களுக்கு ராஜா மீன் பண்ணை குடும்பத்தின் சார்பில் செந் தில்குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார்.

No comments:

Post a Comment