கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு

பழைய வரலாற்றை எடுத்துரைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை ஆக 31- புதுக்கோட்டை யில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 15அன்று சேலத்தில் திமுக இளைஞரணி இரண்டா வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அதற்கு முன்னேற்பாடாக மாவட்டங்கள் தோறும் திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட் டம் நடைபெற்று வருவதின் ஓர் அங்கமாக புதுக்கோட்டையி லும் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட் டத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்டச் திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்ட மன்ற உறுப்பினர் டாக் டர் வை.முத்துராஜா, மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் ந.இளையராசா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பேசுகையில் “நமது தமிழ் நாடு முதலமைச்சர் எல்லோ ருக்கும் எல்லாமும் என்கிற தத் துவத்தின் அடிப்படையில் திரா விட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இளம் தலைவர் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று தி.மு.க. தொண்டர்களைச் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இதுவும் திமுகவில் மட்டுமே உள்ள பண்பாடாக இருக்கிறது. அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்துகளை உள் வாங்கிய இளம் தலைவராக இருக்கிறார்.

அதே போல் அறிவாலும் ஆற்றலாலும் ஆகாதது எதுவு மில்லை என்று சொன்ன அறி ஞர் அண்ணா அவர்களையும் பின் பற்றி வருபவர். எண்பது ஆண்டுகால அரசியல் வர லாற்றை சரியாக உள்வாங்கியவ ராக இருக்கிறார். அதனால்தான் சுற்றிச் சுழன்று கொள்கை வழி நின்று பணியாற்றி வருகிறார்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய திமுக வின் மாநில இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை களின் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் “மாநாட்டுக்கு அழைப்பதற்காக மாவட்டங்கள் தோறும் சென்று வருகிறேன். எல்லா இடங்க ளிலும் பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டாம், பட்டாசு கொளுத்த வேண்டாம் என்று சொல்லி வரு கிறேன். ஆனால் அதை முறை யாகக் கடைப்பிடித்த மாவட்டம் என்ற பெருமையை புதுக் கோட்டை பெற்றிருக்கிறது. தலைமை சொல்வதை தன்னலம் பாராமல் பொதுநலன் கருதி செய்து முடிப்பவன்தான் உண் மையான செயல் வீரன்.

நான் பலமுறை புதுக் கோட்டை மாவட்டத்திற்கு வந்து சென்றிருக்கின்றேன். ஹிந்தி எதிர்ப்புப் போராளிகளான விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து போன்ற தியாகிகளைத் தந்ததுதான் இந்த மாவட்டம். சொந்தக் குடும்பத்தைவிட தி.மு.க. குடும்பத்தின் மீதுதான் தலைவர் கலைஞருக்கு பற்று அதிகம் என்பதை ஒரு சிறந்த உதாரணத்தைக் கூற விரும்பு கின்றேன். புதுக்கோட்டை பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு தேதி கொடுத்து விட்டார்.

கூட்டத்திற்கான ஏற்பாடு கள் நடந்து கொண்டிருக்கின்றன. கலைஞருடைய மனைவி பத் மாவதி பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இது குறித்து அறிந்த வர்கள் பொதுக்கூட்டத்தைத் தள்ளி வைத்துக் கொள்ள லாமா என்று தலைவரிடம் கேட்டார்கள். கொடுத்த தேதி கொடுத்ததுதான். பொதுக் கூட் டத்தி;ற்கு ஏற்பாடுகள் செய்யுங் கள் என்று தலைவர் சொல்லி விட்டார். அதன்படி பொதுக் கூட்டமும் நடைபெற்றது. 

கலைஞர் அந்தக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு சீட்டு கொடுக்கப் பட்டது. அந்தச் சீட்டில் உங்க ளது மனைவி இறந்து விட்டார் என்பது தந்திச் செய்தி. அதைக் கண்டு அதற்காகத் துவளவில்லை. கண்ணீர் வருகிறது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்து பேசுகிறார். பேசி முடித்துவிட்டு ஊருக்குச் செல் கிறார். இப்போது மாதிரி கார் வசதி, பேருந்து வசதிகள் எல்லாம் கிடையாது. வழிப்போக்காக வந்த லாரியில் ஏறிச் சென்று வீட்டுக்குச் சென்று தனது மனை வியின் முகத்தைப் பார்க்கிறார். இதுதான் கலைஞர் அவர்கள் பொதுவாழ்வில் எடுத்துக் கொண்ட உறுதி. தி.முக. குடும் பமே தனது குடும்பம் என்று வாழ்ந்தவர்தான் கலைஞர் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த புதுக்கோட்டை சம்பவம்.

இப்படித்தான் நமது தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாள ராகப் பொறுப்பேற்றுக் கொண் டவுடன் முதன் முதலாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட மாவட் டம் இந்த புதுக்கோட்டை மாவட்டம். மறைந்த புதுக் கோட்டை மாவட்டச் செயலா ளர் பெரியண்ணன் தலைவரை இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று கொடி ஏற்ற வைத்தார். இப்படி பல தொடர்புகள் திமுகவிற்கும் இந்த மாவட்டத்திற்கும் உள்ளது” என்று பேசினார். தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மணிராஜன் நன்றி கூறினார்.

இந்த செயல் வீரர்கள் கூட் டத்திற்கு திமுகவைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட மன்றத் தொகுதிகளிலிருந்தும் தேர்ந் தெடுக்கப் பட்ட ஒரு தொகுதிக்கு ஆயிரம் பேர் என்ற வகையில் இளைஞரணியினர் வெள்ளு டை தரித்து அதற்குரிய பேட்ஜ் அணிந்து கம்பீரமாக வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

No comments:

Post a Comment