புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கினர்

புதுக்கோட்டை, ஆக. 10- புதுக் கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக் கூடிய ஆறாவது புத்தகத் திருவிழாவில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இல்லம் தேடி கல்வி மய்ய மாணவர்கள் பிரமிடு செய்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

அவர்களை பாராட்டும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வழங்கி னார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக் கோட்டை சட்ட மன்ற உறுப் பினர் முத்துராஜா, திராவிட முன் னேற்றக் கழக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை உதவி  திட்ட அலுவலர்-மிமி தங்கமணி, புத்தகத் திரு விழா  ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கமூர்த்தி, வீரமுத்து, மணவாளன், முத்துக்குமார், கலை நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர்கள் குமரேசன், ராம.திலகம், ஆசிரியர் மனசு திட்ட ஒருங் கிணைப்பாளர் சிகரம் சதீஷ், பள்ளிக் கல்வித்துறை துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, மாரிமுத்து, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சாலை.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புத்தகத் திருவிழாவில் கந்தர்வக் கோட்டை ஒன்றியத்தின் சார்பில் திங்கள் முதல் சனி வரை சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு புத்தகத் திரு விழா வில் மஞ்சப்பேட்டை, அக்கச்சி பட்டி, கந்தர்வக்கோட்டை, சுந்தம் பட்டி, ஆண்டிகுளப்பம்பட்டி, வெள்ளாள விடுதி, துவார் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

அதனை தொடர்ந்து மாலை நேரத் தில் நடைபெறும் கலை நிகழ்ச்சி களில் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கந்தரவக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில் கொத்தகப் பட்டி நடுநிலைப் பள்ளியும் , அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும், இல்லம் தேடிக் கல்வி மய்ய மும் இணைந்து கலை நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் செய்திருந்தன.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, இல்லம் தேடி கல்வி மய்ய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, கணித பட்டதாரி ஆசிரியர் மணி மேகலை ஆசிரியர்கள்  சிந்தியா, நிவின் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

இந்நிகழ்வினை சட்டமன்ற உறுப் பினர் சின்னதுரை, வட்டாரக் கல்வி அலுவ லர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம் மன், தொல்லியல் ஆய்வாளர் மணி கண்டன், கல்வியாளர் மருத்துவர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி இலக்கியா உள்பட உறுப்பினர்கள் பாராட்டினர்கள்.


No comments:

Post a Comment