முப்பது வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திராவிட மாடல் அரசு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திராவிட மாடல் அரசு திட்டம்

சென்னை, ஜூலை 24 - தமிழ்நாட்டில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப் பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் பரிசோதனை களை மேற்கொள்ளும் திட் டம் விரைவில் தொடங்கப் படவுள்ளது.

பெண்களுக்குப் பரவ லாக ஏற்படும் மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்களைத் தடுப்பதற்காக, 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோதனை முயற்சியாக 4 மாவட்டங்களில் அத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படு மென தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்குள் 4 மாவட்டங்களில் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத் தூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப் பட்டு, அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்படும். 

அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் அவர் களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய், வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் பரி சோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவப் பரிசோதனைக்கு வராதவர்களையும் கண்டறிந்து அதற்கு அடுத்த சில நாட்களுக்குள் பரிசோதனை செய்யப்படும். கர்ப்பப்பை வாய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு செவிலியர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சுகாதார நிலையத்துக்கு ஒரு செவிலியர் வீதம் அப் பயிற்சி வழங்கப்படும். மக்கள் தொகையைப் பொருத்து தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி

சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சென்னை, ஜூலை 24- பெண்களுக்கான ஒருங் கிணைந்த சேவை மய்யத்தில் தற்காலிக அடிப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆக.18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கு வதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மய்யத்தை அமைப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்படும் ஒருங் கிணைந்த சேவை மய்யத்தில் தற்காலிக அடிப்படையில் வழக்குஅலுவலர்கள் (3), பன்முக உதவியாளர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

வழக்கு அலுவலர்கள் பணிக்கு சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் தொடர்புடைய நிர்வாகத்தில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் மற்றும் உளவியல் ஆலோசனையில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட 35 வயதுக்குட்பட்ட உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாதஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உள்ளூர் பெண்கள்: பன்முக உதவியாளர் பணிக்கு ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட சமையல் தெரிந்த உள்ளூர் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

மாத ஊதியம் ரூ.6,400 ஆகும். வரும் ஆக.18ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்ப தாரர்கள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தி.மு.க. தலைவர்கள் மீது அவதூறு  பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது!

விழுப்புரம், ஜூலை 24-  தி.மு.க. தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க.வின் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலி வரதனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பா.ஜ.க. சார்பில் தமிழ்நாட்டின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நேற்று (23.7.2023) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முத் தமிழறிஞர் கலைஞர் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து பா.ஜ.க.வின் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அவரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர் மீது  அக்கட்சி பெண்களே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை மாற்றக் கோரி விழுப்புரம் பா.ஜ.க. தலைமை நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.

மேலும் இவர் அக்கட்சியின் முக்கிய பெண் பிரமுகரோடு மிகவும் ஆபாசமான முறையில் பேசிய குரல் பதிவு சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பரவியது. இவ்வளவு வக்கிரபுத்திகொண்ட கலிவரதன் தி.மு.க. தலைவர்கள் பற்றியும் மோசமாக பேசியுள்ளார்.

No comments:

Post a Comment