எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வு கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வு கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

சென்னை, ஜூலை 8 -  எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கைவிடுமாறு, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை வரும் 14-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு,  முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கி ணைத்து ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதாவது எம்பிபிஎஸ் இறுதி யாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். நெக்ஸ்ட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை மருத் துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும். அதேபோன்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் இந்தியாவில் மருத்துவ சேவையாற் றவும் அத்தேர்வு கட்டாயமாக்கப் பட உள்ளது.

இந்த தேர்வு முறையால் மாண வர்களின் பயிற்சித் திறன் பாதிக்கப் படும். எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், அடுத்தகட்ட மாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு சார்பில் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம் வரும் 14, 15ஆ-ம் தேதிகளில் உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அப் போது ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் முன்வைக்க உள் ளோம். குறிப்பாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த இருக்கிறோம். அதேபோன்று நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளையும் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment