அரசுப் பணி நிறைவு பெற்று கழகப் பணி தொடரும் தோழர்களுக்குப் பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

அரசுப் பணி நிறைவு பெற்று கழகப் பணி தொடரும் தோழர்களுக்குப் பாராட்டு விழா

திருவாரூர், ஜூலை 31- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரிரணி சார்பில் பயனுள்ள நிகழ்ச்சி 23.7.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு திருவாரூர் கழகப் பணிமனை தமிழர் தலைவர் அரங்கில் நடைபெற்றது. 

விழாவிற்கு மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் கோ.செந்தமிழ்செல்வி தலைமை எற் உரையாற்றினார். முன்னதாக மு.தமிழ்நேயன் வரவேற்புரையாற்றினார். கழகப் பொறுப்பாளர்கள் வீர. கோவிந்தராசு, கி.அருண்காந்தி, க.முனியாண்டி, அரங்க.ஈ.வெ.ரா., எஸ்.கரிகாலன், நாத்திக பொன்முடி ஆகியோர் முன் னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.

பணி நிறைவு பெற்ற தோழர் கள் திருவாரூர் ஒன்றிய மேனாள் ப.க. தலைவர் கா.கவுதமன், நன் னிலம் ஒன்றிய ப.க. செயலாளர் இரா.தன்ராஜ், திருவாரூர் மாவட்ட ப.க. ஆசிரியரணி மேனாள் தலைவர் சு.ஆறு முகம், மாவட்ட ப.க. செயலா ளர் க.அசோக்ராஜ் ஆகியோ ரைப் பாராட்டி உரையாற்றிய கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, மாநில விவசாய அணி செயலாளர் க.வீரையன், ப.க. ஆசிரியர் அணி மாநில அமைப் பாளர் இரா.சிவக்குமார், மாவட்டக் கழக துணைத் தலைவர் கி.அருண்காந்தி ஆகி யோர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.பாராட்டுக் குரிய தோழர்கள் தம் இணை யர்களுடன் சேர்ந்து மகிழ்வு டன் பெற்றுக் கொண்டு ஏற்பு ரையாற்றினர். கழகப் பணி தொடர்வோம் என்றனர்.

விழாவில் பணி ஓய்வு பெற்ற அனைவராலும் போற்றப்படும் முதுகலைத் தமிழாசிரியர் கவிஞர் கோமல் தமிழமுதன் சிறப்புரையாறினார். தந்தை பெரியாரின் சிந்தனையால், உழைப்பால், போராட்டங் களால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகமே பயனடைந்ததை ஆதா ரங்களுடன் எடுத்துரைத்தார்.

விழாவில் இருபால் தோழர் கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலைச் செல்வன், க.முனியாண்டி ஆகி யோர் கொள்கைப் பாடல்களை சிறப்பாகப் பாடி மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியில் கழக மாவட்ட துணைத் தலைவர் பி.சுவாமி நாதன், துணை செயலாளர் கோ.ராமலிங்கம், ஒன்றிய துணை தலைவர் இரா.ராஜேந் திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் சீ.சரசுவதி, நகர இளைஞர் அணி தலைவர் அ.செல்வேந்திரன், நகர இளை ஞர் அணி செயலாளர் ஆ. குபேந்திரன், விளமல் நாகராஜ், கிடாரம் அ.செல்வகுமார், குடவாசல் ஒன்றிய செயலாளர் சீ.அம்பேத்கர், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், திருவாரூர் நகர செயலாளர் ப.ஆறுமுகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் ஏராளமான இருபால் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் க.அசோக்ராஜ் நன்றி யுரையுடன் விழா முடிவுற்றது.

No comments:

Post a Comment