கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

அரியலூர்,ஜூன்30 - கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகை மேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணி கள் நடைபெற்றன.

இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட் டன.

இந்நிலையில் ஏப்.6ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 21 பணியாளர்களைக் கொண்டு 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கற்கலால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

11ஆம் நூற்றாண்டில் வணிகம்

இந்நிலையில், சீன பானை ஓடு கள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப் பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை, 11ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் இருப்பதா கவும், மேலும், இதுபோன்ற பழங் கால பொருட்கள் கிடைக்க வாய்ப் புள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment