மாவட்டம் முழுவதும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

மாவட்டம் முழுவதும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள்

கடலூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்!'

வடக்குத்து, மே 29 கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 23.5.2023 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் எழில் ஏந்தி வரவேற்புரை ஆற்றினார்; மாவட்ட அமைப் பாளர் மணிவேல் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட தலைவர் தண்டபாணி ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை தோழர்களுக்கு வாசித்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராம நாதன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முனி யம்மாள். மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், நெய்வேலி நகர கழகத் தலைவர் இசக்கி முத்து, வடலூர் நகர கழக செயலாளர் குணசேகரன், கடலூர் மாதவன், நெய்வேலி மாணிக்கவேல், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் குணசுந்தரி, சத்யா, தமிழ்மணி, பாவேந்தர் விரும்பி ஆகி யோர் கருத்துகளை வழங்கினர்.

ஈரோட்டு பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும், மாவட்ட முழுவதும் பரப்புரைக் கூட்டங்களை அதிகம் நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், புதிய வரவுகளை இயக் கத்தின்பால் ஈர்ப்பதுசேர்ப்பது பற்றியும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் விளக்கிப் பேசினார்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்களை மாவட்ட முழுவதும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2:

கடலூரில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை பயண நிறைவு விழா பொதுக்கூட் டத்தின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டது.

தீர்மானம் 3:

புதிய கிளைக் கழகங்களை ஏற்படுத்துவது, புதிய வரவுகளை இயக்கத்தின் பால் ஈர்த்திட தோழர்கள் முனைப்புடன் செயல்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 4:

‘விடுதலை' சந்தா சேர்க்கையை தொடர் வேலை திட்டமாக செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 5:

பெரியாரியல் பயிற்சி முகாம் ஒரு நாள் ஜூலை மாதத்தில் கடலூரில் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment