புரட்டு செங்கோல் புரட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

புரட்டு செங்கோல் புரட்டு

சைவசித்தாந்த மரபின் திருக்கயி லாய பரம்பரை தோன்றுவது வெண் ணெய்நல்லூர் மேவிய சீர் மெய் கண்டாரோடு. அவர் சோழர் ஆட்சிக் காலத்தின் இறு வாய்க் காலமான பதின்மூன்றாம் நூற்றாண்டினர். அவரது மாணவக் கால்வழியினரால் தோன்றியவை ஆதீனங்கள். அவ் வகையில் முதலாவது ஆதீனம் திரு வாவடுதுறை. சிறப்பு. ஆனால் அவ் வாதீனம் தோன்றிய காலையில் சோழர் ஆட்சி முற்றுப்பெற்றுவிட்டது என்பதல்லாது சோழர் வமிசமே முற்றுப் பெற்றுவிட்டது. 

அப்படி இருக்க, ஒவ்வொரு சோழ மன்னர் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதும் ஆதீனத்தின் சார்பில் செங் கோல் கொடுத்ததாகக் கிளப்பிவிடு கிறார்களே, யார் அந்தச் சோழ மன்னர்கள்? 

கேப்பையில நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு எங்க போச்சு புத்தின் னானாம்.

- பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன், முகநூலில்


No comments:

Post a Comment