ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

31.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் மக்களவையில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையும். இதை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என பி.ஆர்.எஸ். செயல் தலைவர், அமைச்சர்  கே.டி.ராம ராவ் வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை விவாதிக்க பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கூட்டத்தை ஆளு நர் நடத்த, உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்திட நான்காவது முறையாக மோடி அரசு முடிவு.

தி டெலிகிராப்:

* கருநாடக மாநில தேர்தல் உள்ளிட்டவைகளில் மோடியின் பிரச்சாரம் தோல்வியைக் கண்டுள்ளது. 2024இல் இது எதிரொலிக்கும் என பாஜகவினர் கவலை.

* அறிவியல் கண்டுபிடிப்புகள் வேத காலத்தில் இருந்தது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு! அப்படி எனில்,  ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை உருவாக்க இஸ்ரோ ஏன் வேதங்களிலிருந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என பி.எஸ்.எஸ். (அறிவியலாளர்கள் அமைப்பு) கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் (30.5)

* மோடி அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிர்வாக ரீதியாக பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மோடிக்கு எந்த பின்னடைவும் அரசியல் ரீதியாக ஏற்படவில்லை என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி என்கிறார் பேராசிரியர் சுகாஸ் பல்சிகார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment