தங்கள் நாட்டில் குடியிருப்போருக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி அளிக்கிறது. அப்படிப்பட்ட நாடுகளில் 5 இடங்கள் பற்றிய விவரம் வருமாறு,
இத்தாலி அருகே உள்ள ப்ரெசிஸ்(Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் அந்த நாட்டின் அரசே உங்களுக்கு கொடுக்கிறது . இங்கு பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் மக்கள் தொகை பெருகவில்லை. மக்கள்தொகையை அதிகரிக்க தான் இந்த ஏற்பாடு.
கிரேக்க தீவு ஆன்டிகிதெரா (Antikythera). யாராவது இங்கு குடியேற முடிவு செய்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் அரசு அவருக்கு வழங்கும். தற்போது இந்த தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த அல்பினென்(Albinen) என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் குடியேறும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு ரூ.20 லட்சமும், இணையர்களுக்கு ரூ.40 லட்சமும் வழங்குகிறது. இது தவிர குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டக்கூடாது என்பது நிபந்தனையாகும்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா. பனி மற்றும் குளிரால் இங்கு வாழ்பவர்கள் குறைவு, ஆனால் இங்கு தங்குபவருக்கு ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1 வருடமாவது இங்கு தங்க வேண்டும் என்பது நிபந்தனை.
ஸ்பெயினில் உள்ள பொங்கா என்ற கிராமம். மக்கள் தொகை குறைந்த இத்தகைய சூழ்நிலையில், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இளம் குடிமக்களை ஈர்க்கவும், ஒவ்வொரு இணையருக்கும் இங்கு குடியேற உள்ளூர் அதிகாரிகளால் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் போது குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment