எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு - பொதுக்குழு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு - பொதுக்குழு!

வரலாற்று சிறப்புமிகு திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் கோவை சிற்றரசு நினைவு மேடை, மல்லிகை அரங்கத்தில் 13.5.2023 அன்று நடைபெற்றது.

பொதுக்குழுவின் தொடக்கத்தில் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் பா.மணியம்மை அவர்கள் கடவுள் மறுப்பு கூறினார். மாநில அமைப்பாளர் ஈரோடு சண்முகம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து, கழக செய லவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமை உரையாற்றினார். கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களால் ஆண்டு அறிக்கையும், கழகத்தின் செயல் பாடுகள், கழகத் தலைவரின் சுற்றுப்பயணங்கள் விவரிக்கப் பட்டது. பெரியார் உலகத்தின் பணிகள் காணொளி வாயிலாக திரையிடப்பட்டது.

திராவிடர் கழக தீர்மானங்கள்தான் எதிர்கால சட்டங்களாக, இச்சமூகத்தில் வந்திருக்கிறது என்ற சிறப்பை அனைவரும் அறிவோம். அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானங்களில் "நூற்றாண்டு விழா" தீர்மானத்தை கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிய அரங்கமே எழுந்து நின்று கரஒலி மூலம் அதனை செயல்படுத்துவோம் என்ற உறுதி மொழியை வழங்கினர். 

தொடர்ந்து, கழகத்தின் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன்,  துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோரால் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

பொதுக்குழுவில் திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் அ. அருள்மொழி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், துணை பொதுச்செயலாளர் இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவ தனி,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, தொழிலாளர் அணி  மாநில செயலாளர் மு.சேகர் மாநில அமைப்பாளர்கள் வீ. பன்னீர்செல்வம், மதுரை வே. செல்வம், தருமபுரி,  ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை மாநில இளைஞரணி செய லாளர் த.சீ. இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர் இரா. செந்தூரப்பாண்டியன் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.


No comments:

Post a Comment