பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 26, 2023

பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு

அரியலூர், மே  26- அரியலூர் மாவட்ட மதச் சார்பற்ற கூட்டமைப்பு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் மக்கள் கண் காணிப்பகம் சார்பில் பாகுபாட்டை வளர்ந்திருக்கும் சனாதனத்திற்கு எதிராக சமூக நீதி கூட்டாட்சி மதச்சார்பின்மை பாதுகாக்க இந் திய அரசமைப்புச் சட்ட பாது காப்பு மாநாடு 24.5.2023 புதன் மாலை 6.30 மணி முதல் 10 மணி வரை அண்ணா சிலை அருகில் சமூக செயற்பாட்டாளர் வழக்கு ரைஞர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் அம்பிகா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் ராமநாதன், தமிழக வாழ் வுரிமைக் கட்சி மாவட்ட செய லாளர் சாமிநாதன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செய லாளர் அக்பர், மனிதநேய மக்கள் கட்சி சாகுல் ஹமீது, தமிழ் களம் இளவரசன், மனிதா நினைவு நூலக பொறுப்பாளர் மணிரத் தினம், முகமது ரஃபீக், ராஜாராம், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பா, எஸ் டிபிஅய் மாநில தலைவர் முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிழ் முன் அன்சாரி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதய ராஜ், மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி திபேல், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப் பினர் சண்முகம் ஆகியோர் உரை யாற்றினர். 

குடிமக்கள் இயக்க பொறுப் பாளர் ராசன் நெறியாளுகை செய்தார். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்க பொறுப் பாளர் ஆசீர் நன்றி கூறினார். கழ கத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் காமராஜ், செந்துறை செந்தில், வீரா கண் அறிவன், தமிழ்ச்செல்வன், ரத்தின ராமச்சந்திரன், சிந்தனைச் செல்வன், கார்த்திக், தமிழரசன், கோபால், ராமச்சந்திரன், வெங் கடாசலம், ராஜேந்திரன், மீன் சுருட்டி திலீபன் மற்றும் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment