எல்.அய்.சி. பங்கு மதிப்பு சரிவு : ஒன்றிய அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

எல்.அய்.சி. பங்கு மதிப்பு சரிவு : ஒன்றிய அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி,மே18 - பங்குச் சந்தையில் எல்அய்சியின் மொத்த மதிப்பு 35 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதற்கு, ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்அய்சி கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால், இந்த பங்கு விற்பனை எதிர்பார்த்த வரவேற்பைப் பெற வில்லை. இரு பங்குச் சந்தைகளிலும் கடந்த ஓராண்டில் 35 சதவீதம் அளவுக்கு எல்அய்சி பங்கு விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இது தொடர் பாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சரியாக ஓராண்டுக்கு முன்பு இந்தியப் பங்குச் சந்தைகளில் எல்அய்சி பட்டியலிடப்பட்டது. அப்போது பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இப்போது ரூ.3.59 லட்சம் கோடியாக உள்ளது. பங்கு மதிப்பு 35 சதவீதம் அளவுக்கு சரிவடைந் துள்ளது.

இதற்கு இரு நபர்களும் (மோடி-அதானி), ஒன்றிய அரசின் மோசமான செயல்பாடும்தான் காரணம். எல் அய்சி-யின் சந்தை மதிப்பு வீழ்ச்சியால் பல லட்சக்கணக்கான காப்பீட்டு தாரர்கள்தான் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்’ என்று கூறி யுள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டால் வீழ்ந்த அதானி குழும பங்குகளில் எல்அய்சி அதிக அளவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசே காரணம் என்று காங்கிரஸ் ஏற்கெனவே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment