மருத்துவர்களை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை கேரள அமைச்சரவை முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

மருத்துவர்களை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை கேரள அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம்,மே18 - கேரள மாநிலத்தில் மருத்துவர்கள், மருத் துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை தாக் கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் அவசர சட்டத்துக்கு அம்மாநில அரசு நேற்று (17.5.2023)ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அவசர சட் டத்தின்மூலம் மூன்று ஆண்டு களாக இருந்த சிறைத் தண்டனை 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட் டுள்ளது.

மேலும், மருத்துவப் பணியாளர்கள் மீதான வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்க மாவட்டந் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அண்மையில் போதைக்கு அடிமை யானவரின் காயத்துக்கு சிகிச்சை அளித்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இதையடுத்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் மருத்துவர் படுகொலை சம்பவம், அமைப்புரீதியிலான தோல்வி என்று மாநில அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று (17.5.2023) நடைபெற்றது. இதில், கடந்த 2012-ஆம் ஆண்டின் கேரள மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறு வனங்கள் (வன்முறை மற்றும் பொருள்சேதம் தடுப்பு) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவ பணியா ளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட முயற்சித்தாலோ அல்லது வன் முறையை தூண்டினாலோ அவர் களுக்கு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்ட னையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக் கப்படும்.

மேற்கண்ட சட்டத்தின்கீழ் மருத்துவப் பணியாளருக்கு எதி ரான வன்முறை அல்லது மருத்துவ நிறுவனத்துக்கு பொருள்சேதம் ஏற்படுத்தும் குற்றத்துக்கு இது வரை அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையே இருந்தது. அதேபோல், அதிகபட்ச அபராதம் ரூ.50 ஆயிரமாக இருந்த நிலையில், சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை அதிகரிக்க அவசர சட்டம் வழிவகுக்கிறது.

சிறப்பு நீதிமன்றங்கள்

மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக் கவும்; இந்த வழக்குகளை காவல் ஆய்வாளர் தகுதிக்கு குறையாத அதிகாரி விசாரிக்கவும் -  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததில் இருந்து 60 நாள்களுக்குள் விசா ரணையை நிறைவு செய்யவும் அவசர சட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டின் சட்டத்தின்கீழ், தொழில் முறைரீதியாக பதிவு செய்த செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாண வர்கள், செவிலியர் மாணவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்குதான் இதுவரை பாதுகாப்பு இருந்தது.

இந்நிலையில், துணை மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை களில் பணியாற்றும் பாதுகாவ லர்கள், நிர்வாக ஊழியர்கள், ஆம் புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்டோரும் இச் சட்ட பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவசர சட் டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இனி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப் பப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment