ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திட பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு! விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திட பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு! விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது!

கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

விழுப்புரம், மே 17- விழுப்புரம் நகராட்சி திடலில் 16.5.2023 மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஜாதிய ஒடுக்கு முறைகளை ஒழித்திடுவோம் ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைத்திடுவோம் என்ற முழக் கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பட் டியல் இன பழங்குடி மக்கள் மாநாடு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் ராமமூர்த்தி வர வேற்புரை ஆற்றினார். அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலா ளர் தோழர் சீதாராம் யெச்சூரி சிறப்புரை ஆற்றினார். 

திமுக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் பொன் முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பால பிரஜா பதி அடிகளார், விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலா ளர் ரவிக்குமார், தமிழக வாழ் வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், மதிமுக அரசியல் ஆய்வு குழு உறுப் பினர் செந்தில் அதிபன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத் திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி ஆதித் தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், தியாகி இமா னுவேல் பேரவை முதன்மை செயலாளர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரவீந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். திராவிடர் கழகத் தின் சார்பில் பொதுச் செயலா ளர் முனைவர் துரை,சந்திர சேகரன் பங்கேற்று உரையாற் றினார்.

கழகத்தின் மாவட்ட தலை வர் சுப்பராயன், அமைப்பாளர் கோபண்ணா, இளைஞரணி தலைவர் சதீஷ், செஞ்சி அறிவுடைநம்பி, பார்த்திபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, நெய்வேலி பாவேந்தர் விரும்பி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். 

தமிழ் நாட்டில் நிலவும் பல்வேறு விதமான தீண்டாமை கொடு மைகளை தடுத்திட வேண்டும், கோயில்களில் பட்டேல் இன மக்களை வழிபட அனுமதிப் பது இடுகாடுகளில் உடல் களை அடக்கம் செய்ய அனும திப்பது, இரட்டை குவளை முறை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமை கொடு மைகளுக்கும் முடிவு கட்டிட வேண்டும், தீண்டாமை கொடு மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடைமுறை யில் உள்ள 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும், இதற்கு உதவும் வகையில் சிறப்பு நீதிமன் றங்களை அமைத்திட வேண்டும், 

ஜாதி ஆணவ படுகொலை கள் மற்றும் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நிய மிக்கப்படுவதற்கு நீதிமன்றங் களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்ய மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், அறிவிய லுக்கு விரோதமானது ஜாதி என்பதை பற்றி பாடத்திட் டத்தின் ஒரு பகுதியாக இணைத் திட வேண்டும், பழங்குடி மக் களுக்கு ஜாதி சான்றிதழ் தடையின்றியும் தாமதம் இல்லா மலும் வழங்கிட வேண்டும் .தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் இணைத்திட வேண் டும் என்பன போன்ற கோரிக் கைகளை இம் மாநாட்டில் தீர் மானங்களாக நிறைவேற்றினர் 

முடிவில் தோழர் ஆர் கண் ணப்பன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment