கோவை ச.சிற்றரசு படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

கோவை ச.சிற்றரசு படத்திறப்பு - நினைவேந்தல்

கோவை, மே 3 கோவை மண்டல கழக செயலாளர் மறைவுற்ற ச.சிற்றரசு படத்திறப்பு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 28இல் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவக அரங்கில் மாவட்ட காப் பாளர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்,  ச.சிற்றரசு அவர்களின் படத்தை திறந்து வைத்தார்.

அப்போது கூறியதாவது:

தலைமைக் கழகம் அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், போராட்டம் அனைத்தையும் மிக சிறப்பாக கோவை மாவட்டத்தில் - மண்டலத்தில் நடத்தி காட்ட தமது களப்பணி ஆற்றி கொள்கை முழக்கம் எழுப்பும் கொள்கை வீரர் - ஏராளமான பெரியார் பிஞ்சுகளை மாணவர்களை இளைஞர் களை ஊக்கப்படுத்தி கழக கொள்கை பாதைக்கு  குடும்பம் குடும்பமாக கொண்டு வந்தவர் பல இளைஞர்கள் பேச்சாளர்களாக மாறக் காரணமாக இருந்த அவரின் இயக்கப் பணிகள் குறித்தும், இயக்கத்தின் மீதும் கழகத் தலைவர் ஆசிரியர் மீதும் சிற்றரசு கொண்டிருந்த, அன்பை எடுத்துக் கூறி இரங்கல் உரையாற்றினார்.

தொடர்ந்து மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கழக சொற்பொழிவாளர் தஞ்சை 

இரா.பெரியார் செல்வம், இளைஞரணி மாநில அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மண்டல தலைவர் இரா.கருணாகரன், கோவை மாவட்ட தலைவர் திக.செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் க.வீர மணி, மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, பொள்ளாச்சி மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து, தாராபுரம் மாவட்ட செயலாளர் தம்பி பிரபாகரன், கோபி மாவட்ட செயலாளர் மு.சென் னியப்பன் உரையாற்றினர். தொடர்ந்து தந்தை பெரியார் கழக பொதுச்செயலாளர் கோவை 

கு.இராம கிருட்டிணன், சிற்றரசு அவர்களின் களப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர், மு.பேரூராட்சி தலைவர் குறிச்சி நா.பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் இர.தனலெட்சுமி, குறிச்சி வடக்குபகுதி செயலாளர், எஸ்.ஏ.காதர், குறிச்சி தெற்குப் பகுதி செயலாளர், மாமன்ற உறுப் பினர் இரா.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் கே.பி.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜசோழன் மற்றும் மக்கள் இயக்கம் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் (ஒபிஎஸ்) குறிச்சி மணிமாறன், காங்கிரஸ் கு.பெ.துரை, கி.வெற்றிவேலு அஇஅதிமுக மேனாள் மாமன்ற உறுப்பினர் தெற்கு மண்டல தலைவர் கே.என்.செந்தில்குமார், கி.வெற்றிவேலு, தேமுதிக முருகேசன், சிபிஅய் குறிச்சி ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் குறிச்சி பகுதி செயலாளர் அந்தோணி அன்பரசு,ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் நினைவேந்தல் உரை காணொலி வாயிலாக உரை ஒலிபரப்பப்பட்டது.

மாநகர செயலாளர் வே.தமிழ்முரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக சுந்தராபுரம் சங்கம் வீதியில் கழகத் தோழர்கள் அனைத்துக் கட்சி நண்பர்கள், உற வினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு, சிற்றரசு ஒளிப்படத்தை சுமந்து, இரு புறமும் கழக கருப்புச் சட்டை தோழர்கள் கழக கொடியையும் ஏந்தி நூற்றுக்கணக்கானோர் அணி வகுத்து வர அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

பெரியார் சிலைக்கு மாலை

அமைதி ஊர்வலமானது சுந்தராபுரம் தந்தை பெரியார் சிலைக்கு முன்பாக வருகை தந்ததும் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் மகனும், மாவட்ட இளைஞரணி தலைவருமான இரா.சி பிரபாகரன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கொள்கை உணர்ச்சி மிகுந்த தோழர்கள் "எங்கள் சிற்றரசுக்கு வீரவணக்கம், பெரியார் தொண்டருக்கு வீர வணக்கம், ஜாதி ஒழிப்பு போராளிக்கு வீரவணக்கம்" என்று இயக்க கொள்கை முழக்கங்களை எழுப்பி தங்கள் மரியாதையை செலுத்தினர்.

நிகழ்வில் மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் கா.சு.ரங்கசாமி, பொள்ளாச்சி மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன், தாராபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கோபி மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மாநகர செயலாளர் ச.திராவிட மணி, மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், வடக்குப் பகுதி செயலாளர் கவிஞர் கவி. கிருஷ்ணன், தெற்கு பகுதி செயலாளர் தே.குமரேசன், கிழக்கு பகுதி செயலாளர் இல. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், விடுதலை வாசகர் வட்டம் கு.வெ.கி.செந்தில், ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செல்வக்குமார், யாழ்வெங்கடேஷ், தா.சூசைராஜ், ஆனந்த், அருண், ந.குரு, ஆவின் சுப்பையா, இருதயராஜ், கா.கோபாலகிருஷ்ணன், சா.சிவக்குமார், கணபதி காமராஜ், கா.பிரபாகரன், ஆடிட்டர் ஆனந்தராஜ், ஜெயக்குமார், முரு கானந்தம், ரமேஷ், அர்ஜூனன், முத்துகணேசன், பழனியப்பன்,அஜித் மாணவர் கழக மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, பேராசிரியர் மு.தவமணி, திலகமணி, தேவிகா, கவிதா, முத்துமணி, தனலட்சுமி, மகேஷ்வரி, வேணீஸ்வரி, கயல்விழி, சகாயமேரி, வழக்குரைஞர் ச.பவதாரணி,  ஜோதிமணி, கல்பனா, தவமணி மற்றும் பக மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் அக்ரி நாகராஜ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கா.கவுதமன், அமைப்பாளர் ஞா.ம.தமிழ்ச்செல்வன், மதுக்கரை ஒன்றிய தலைவர் ந.மருதமுத்து  செயலாளர் பொன்ராஜ், பகுதி கழக செயலாளர்கள் தே.குமரேசன், பிரபு, மா.கவி கிருஷ்ணன், இல.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பிள்ளையார்புரம் ஆனந்த், நா.குரு, ஜெயக்குமார், மற்றும் உற வினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டு மரியாதை செலுத்தினர்.

நிறைவாக மாவட்ட மாணவர் கழகத் தலைவர் தக.கவுதமன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment