ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 26, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய 

முக்கிய செய்திகள்

26.5.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* அனைத்து கடிதங்களையும் பாஜக தலைமை ஹிந்தியில் அனுப்புவதால், தெலுங்கானா பாஜக நிர்வாகி கள் மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிக்கல் என புலம்பு கின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் செயல்படும் அமுல் நிறுவனம் செயல்பாட்டை தடுக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா மாநிலங்கள் சிறப்பாக பணியாற்றி முன்னணியில் உள்ளன என நிதி ஆயோக் அறிக்கை.

தி இந்து:

* செங்கோல் அளிப்பதை, தலைவர்களால், அப்போதைய அரசாங்கத்தால் அடையாளப் பூர்வமான அதிகாரப் பரிமாற்றமாக கருதினார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக இல்லை.

* பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துடன் 'இழந்த' தமிழ் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முயற்சி ஏப்ரலில் செய்யப்பட்டது, ஆனால் 'இஸ்லாமிய தீவிரவாதி கள் படையெடுப்பு' மக்களை இடம்பெயரச் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தி டெலிகிராப்:

* நரேந்திர மோடி அரசின் ஆணவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம். புதிய நாடாளு மன்றக் கட்டடத்தை திறந்து வைக்கும் உரிமையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பறித்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தியை மக்களுக்கு கூறுகிறார் எனவும் கேள்வி.

* சிவில் சர்வீஸ் அதிகாரிகளை ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும், அடிவருடிகளாக நியமிப்பதற்கான நகர்வுகள் நடந்து வருகின்றன என குடியரசுத் தலைவருக்கு மேனாள் சிவில் சர்வீஸ் மூத்த அதிகாரிகள் மனு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment