பிஜேபியை தோற்கடிக்க மம்தா புதிய வியூகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

பிஜேபியை தோற்கடிக்க மம்தா புதிய வியூகம்

கொல்கத்தா, மே 16 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடந்தது. அதன் முடிவில், காங் கிரஸ் கட்சி தனிப்பெரும்பான் மையுடன் வெற்றி பெற்றது. 135 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க. 60-க்கும் மேற் பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் பா.ஜ.க. தேல்வி அடைந்தது. 

கருநாடகாவில், 36 ஆண்டு களுக்கு பின்னர் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றி ருக்கிறது. தனி பெரும் கட்சியாக கருநாடகாவில் உருவெடுத்து இருக்கிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா  கருத்து தெரிவித்துள் ளார். 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நாடு முழுவதும் காங் கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங் களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை, அதே போல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும். கருநாடகா வில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், வங்காளத்தில் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும் பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும். 

திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள் ளது. எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டில்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்கத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர் ஜேடி கூட்டணி மற்றும் பிறரா லும் ஆதரிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment