கூகுள், அமேசானை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் பில்கேட்ஸ் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

கூகுள், அமேசானை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் பில்கேட்ஸ் உறுதி

சான்பிரான்சிஸ்கோ, மே 29 கூகுள், அமேசான் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட் பம் அழித்து விடும் என்று மைக் ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித் துள்ளார்.

கூகுள் இப்போது தேடும் பொறியாக உள்ளது. அமே சான் பொருட்கள் வாங்க கூடிய இடமாக உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (ஏஅய்) விரைவில் கூகுள் மற்றும் அமேசான் ஆகியவற்றை அழித்து விடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்றம் 2023 கருத்தரங்கில் பங்கேற்று கூறியதாவது: நீங்கள் விரும்புவதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புரிந்து கொண்டால், கூகுள் தேடுபொறியைப் பார்வையிடுவது அல்லது அமேசானில் ஷாப்பிங் செய்வது ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்?.

தற்போதைய வேகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால் கூகுள் தேடல், அமேசான் மற்றும் ஷாப்பிபை போன் றவை விரைவில் காலாவதியாகிவிடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கெனவே எதிர்கால பொருளா தாரங்களை மாற்றுகிறது. ஒரு புதிய செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்ப கருவி மனித சிந்தனை முறைகள், தேவைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினால், அது மனித நடத்தையைக் கூட மாற்றக்கூடும். அதன்பின் நீங்கள் மீண்டும் ஒரு தேடல் தளத்திற்கு செல்ல மாட்டீர்கள். நீங்கள் ஒரு போதும் உற்பத்தித் தளத்திற்கு செல்ல மாட்டீர்கள். நீங்கள் மீண்டும் அமேசானுக்கு செல்ல மாட்டீர்கள்.

அமெரிக்காவில் செயற்கை தொழில்நுட்பம் தொடர் பான ஸ்டார்ட் அப்கள் வேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை மைக்ரோசாப்ட் வழிநடத்தும் என்றும் நான் நம்புகிறேன். மைக்ரோசாப்ட் அங்கு வரவில்லை என்றால் நான் ஏமாற்றமடைவேன். ஓபன் ஏஅய் மற்றும் சாட்ஜிபிடியில் ரூ.8256 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மைக் ரோசாப்ட் எம்எஸ் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட், அவுட்லுக் ஆகியவற்றுடன் சாட்ஜிபிடிஅய் ஒருங்கி ணைக்கிறது. இன்னும் ஒருபடி முன்னேற்றமாக மனித உருவத்தில் ரோபோக்கள் தொழில்துறை வேலைகளை மலிவாகவும், திறமை யாகவும் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment