'நீட்' - தமிழ்நாடு மட்டுமே ஏன் கடுமையாக எதிர்க்கிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

'நீட்' - தமிழ்நாடு மட்டுமே ஏன் கடுமையாக எதிர்க்கிறது?

பாணன்

இதோ, மருத்துவம் படிக்கத் தேவையான பாடங்களில் இந்த மாணவி  எடுத்திருக்கும் இந்தச் சிறப்பான மதிப்பெண்களை சான்றாகப் பார்ப்போம்.

இந்தப் பெண் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆஃப் ஏறக்குறைய 98.5%

இதர பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் இந்த மாணவி, 2016ஆம் ஆண்டிற்கு முன்னர், இதே அளவு மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், இவருக்கு சென்னையின் வேறேதும் முதல்தர அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது அந்தப் பெண் விரும்பும் அவருக்கருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் அல்லது இரண்டாம் நாளே சீட் கிடைத்திருக்கும்.

இப்போதும் இவர் நீட் எழுதி யிருக்கலாம்.  அதையும் நன்றாகவே எழுதியிருக்கலாம்.  ஒருவேளை இந்தியளவில் நிர்ணயிக்கப்பட்ட முதல் மதிப்பெண்ணிற்கு நெருக்கமாக நீட் மார்க் எடுத்தால், அவருக்கு அத்தனையும் கிடைக்கத்தான் செய்யும்.  ஆனால் முதல் மார்க்கிலிருந்து சற்றே குறைத்து எடுத்தாலும் போட்டி மிகப் பலமாகி, அவருக்கு வேண்டிய கல்லூரி கிட்டாமல் போகவே வாய்ப்பதிகம்.

ஏன் ?

ஏனெனில், நீட் என்ற கொடூரத்தின் முன்பு இந்த மாணவி எடுத்திருக்கும்  மதிப்பெண்களில் ஒன்று கூட அவருக்கு உதவாது.  

அவ்வளவு வக்கிரமாய்த் திட்டமிடப்பட்டது அந்த நீட்!

ஜெயலலிதா காலத்தில், தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருந்தது.  ஆனால் அந்த நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் பாதி மதிப்போடு, இறுதித் தேர்வில் எடுத்த கட் ஆஃபில் பாதியையும் சேர்த்தே தரம் நிர்ணயிப்பார்கள்.

அப்போது, நாம் கஷ்டப்பட்டு ப்ளஸ் டூ படித்து, எடுத்த மதிப்பெண்களுக்கு ஓர் அர்த்தம் இருந்தது.  ஆனால் அந்த நுழைவுத் தேர்வு கூட ஏழைகளுக்கோ, கிராமப்புற மாணவர்களுக்கோ எட்டாக்கனி என்று கூறி யாவருக்கும் சமமான சமூக நீதியாக, நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது!

ஆனால், பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்ட இந்த நீட் முற்றிலும் சமூகநீதி அற்ற மிருகத்தனமான ஒன்று.

உடனே சிலர்  இது காங்கிரஸ் கொண்டு வந்ததாயிற்றே என்பார்கள். அவர்கள் கொண்டு வந்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமேயானது.  தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள், பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கண்டவன்களுக்கும் மருத்துவர் என்கிற பொய்ச் சான்றிதழ் களை அளிக்கிறார்கள் என்றுணர்ந்து அவசரமாக கொண்டுவரப்பட்டச் சட்டம் அது.  

எங்களுடைய மாநிலத்தில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் கூட ஊழலில்லாமல் மிகச் சரியாக இயங்குகின்றன.  நாங்கள் முறைப்படி அவைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்பதால் எங்கள் மாநிலத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் நுழைவுத் தேர்வுக்கெதிராக அவசரச் சட்டமொன்றைக் கொண்டு வந்து சாதித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்!

அந்தக் கேடயத்தைக் கொண்டே ஜெயலலிதாவும், தான் ஆட்சியில் இருந்த 2016 வரை, நீட் இங்கு நுழைய முடியாமல் பார்த்துக் கொண்டார்! 2010இலேயே, நீட் அறிமுகப்படுத்தப்பட்டாலும், 2013 வரை அதனால் ஒன்றையுமே சாதிக்க இயலவில்லை.  வேலூர் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் போன்ற தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மிகத் திடமாக நீட்டை எதிர்க்க, காங்கிரஸ் ஆட்சியில் கடைசி வரை அது தோற்று வாடிக்கிடந்தது !

2014இல் சங்கிகள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்விற்கு உயிரூட்டினார்கள்.  2016 வரை கலைஞர் கொண்டுவந்திருந்த நுழைவுத் தேர்வு தடைச்சட்டத்தால் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் தவித்த அந்த நச்சரவம், 2017ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி வழியாக உள்ளே நுழைந்தது.  நுழையும்போதே 95% மதிப்பெண்களைப் பெற்றிருந்த அனிதாவைக் கொன்று தின்றுதான் வந்தது !

அதன்பின் நீட் இங்கு பல நல்ல மாணவர்களை கொன்றவண்ணமே இருக்கிறது. 

நீட், தேர்வு என்பது ஆள் மாறாட்டம், பேப்பர் சேஸிங், கேள்வித்தாள் குளறுபடி, நீட் கோச்சிங் செண்டர்களின் சூதுகள் என முழுக்க முழுக்க செல்வந்தர்களின் நலம் சார்ந்தே வடிவமைக்கப்பட்ட ஒன்று!


No comments:

Post a Comment