தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்!

நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்நெல்லை, மே. 10- நெல்லை மாவட் டத்தில் தாமிரபரணி ஆறு.நம்பி யாறு, கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழு அளவில் முடிவடைந்து பயன் பாட்டிற்கு வரும் என நெல்லை மாவட்டத்தில் நதி நீர் இணைப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நதி நீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 

முதலாவதாக தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி யாறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணி களில் மூன்றாவது நிலையாக நடந்து வரும் நாங்குநேரி அருகே உள்ள கோவன்குளம் பகுதியை தமிழ்நாடு சட் டப்பேரவைத் தலை வர் மு.அப்பாவு முன்னிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நேரில் பார்வையிட்டு ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

பின்னர் திட்டப் பணிகள் குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் துறை அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்டத்தின் கடைசி பகுதியான தூத்துக்குடி மாவட்டம் எம். எல்.தேரி பகுதியிலும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் நெல்லை பொன்னாக்குடியில் நான்கு வழி சாலையின் குறுக்கே நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக கட் டப்பட்டு வரும் பாலப் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது,

நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை புயல் வேகத்தில் நடந்து வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு விட்டது.பொது மக்களின் நலனிற்காக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் மீண்டும் முன்னெ டுத்து திட்டத்தை விரிவுபடுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவித்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் 67.075 கிலோ மீட்டர் நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கிலோமீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆய்வு செய்ததன் அடிப்படையில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதம் மழை காலங் களில் இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது 17,002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உள்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை.நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம். திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் முடிவடைந்து முழு பயன்பாட் டிற்கு வரும்.

இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்த வர்களுக்கு கடந்த ஆட் சியில் முறையாக பணம் வழங்க வில்லை. தற்போது இடம் கொடுத் தவர்களுக்கு விளம்பரம் செய்யப் பட்டு பணம் கொடுக்கப்பட்டு வரு கிறது. நீதி ஆதாரத்தை பொறுத்து அணைகள் தூர் வாரப்படும்.கடனாநதி, இராமநதி இணைப்புத் திட்டம், ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் குறித்து அடுத்த மாதம் தென்காசி மாவட்டம் செல்கிறேன். அங்கு ஆய்வு செய்து திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். நிதி ஆதாரங்களை பொறுத்து அணைகள் தூர்வாரும் பணி நடத்தப்படும்.பிற மாநிலங் களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல அனுமதி உள்ளது.முறை யாக அனுமதிகளை பெற்றுத்தான் கொண்டு செல்கிறார்கள். கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சத கனரக வாகனங் களில் கனிம வளங்கள் கடத்தப்பட் டால் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  -இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

முன்னதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இடை யன்குடியில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லத்திற்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்.அங்குள்ள அருங்காட்சியகத் தையும் பார்வையிட்டார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சித்திக், ஒன்றியச் செயலாளர்கள் ராஜன், ஜோசப்பெல்சி, ஆரோக் கிய எட்வின் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment