ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 4.5.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திக்கிறார்.

* காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,  ஆட்சிக்கு வந்ததும் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என்ற அறிவிப்பு கருநாடகாவில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாடு முழுவதும் 1222 பொதுக் கூட்டங்களை நடத்தி ஆட்சியின் சாதனைகளை, நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க திமுக முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பத்திரிகை சுதந்திரம் குறித்த வருடாந்திர அறிக்கையை பன்னாட்டு ஊடக கண்காணிப்பு அமைப்பான ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (ஆர்எஸ்எஃப்), உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெளியிடுகிறது, கடந்த ஆண்டு 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியாவை 150ஆவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு, உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 161க்கு சரிந்தது

தி டெலிகிராப்:

* உச்ச நீதிமன்ற கொலீஜியம், பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்குரைஞர் ஃபிர்தோஷ் ஃபிரோஸ் பூனிவாலாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளது. இவரின் மூத்த வழக்குரைஞர், கடந்த சில ஆண்டுகளாக பேச்சு சுதந்திரம் இல்லாதது குறித்து கவலை தெரிவித்து ஒரு கட்டுரை எழுதியிருந்ததை அடிப்படையாக கொண்ட உளவுத்துறையின் ஆட்சேபனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசு ஊழியர் ஒருவர் சமர்ப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர் சமூகச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவோ அல்லது சரிபார்க்கவோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

-குடந்தை கருணா


No comments:

Post a Comment