டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, மே 17- சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தேசிய டெங்கு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (16.5.2023) நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் எழி லன் நாகநாதன், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர் ச.உமா, பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத் துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் சண்முககனி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் கூடுதல் விழிப் புணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவதும் தேசிய டெங்கு தடுப்பு நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கொசு உற்பத் தியாகும் இடங்களைக் கண்ட றிந்து, பூச்சியியல் ஆய்வுப் பணி மேற் கொள்ளப்படுகிறது.

அனைத்து அரசு மருத்துவமனை களிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு காய்ச் சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட் டுள்ளன.

எலிசா முறையில் டெங்கு காய்ச் சலைக் கண்டுபிடிக்கும் பரிசோ தனை மய்யங்களின் எண்ணிக்கை 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மருத் துவ முறை பாரம்பரிய மருந் துகளான நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

குறும்படம் மற்றும் விளம்பரங்கள் வெளியீடு மூலம், கொசு உற்பத்தியைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு குறித்தும், காய்ச்சலுக்கானசிகிச்சை கள் குறித்தும் தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏறத் தாழ 21 ஆயிரம் களப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின் றனர். கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள்போதிய அளவில் இருப்பில் உள்ளன.

இப்பணிகள் அனைத்துத் துறை அலுவலர்களாலும் கண்காணிக் கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச் சலைக் கட்டுப்படுத்துவதில், சிறப் பாகப் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசுப்புழு அழிக்கும் களப் பணியாளர் களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விவகாரம்:

கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 7 பேரும், புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் ஒருவரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 55 பேரும், திண்டிவனம் அரசு மருத் துவமனையில் 2 பேரும், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக் கட்டவர்களை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிக்குமாறு அறி வுறுத்தியுள்ளார். மேலும், இறந்தவர் கள் குடும்பங்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 55 பேரும் சிகிச்சை முடிந்து, பூரண நலத்துடன் வீடு திரும்ப ஏதுவாக பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க உள் ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

No comments:

Post a Comment