சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவு

சென்னை, மே 13- சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக் கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் மாதத்திலும், 12ஆ-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நிறைவு பெற்றன. 

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10, 12ஆ-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை நேற்று வெளியிட்டது. மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/, https://www.results.nic.in/, https://results.digilocker.gov.in/, https://umang.gov.in என்ற இணைய தளங் களில் சென்று தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட் டது.

சி.பி.எஸ்.இ. 12ஆ-ம் வகுப்புத் தேர்வை எழுதிய 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேரில், 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 மாணவ-மாண விகள் தேர்ச்சி பெற்று இருக் கின் றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87.33 சதவீதம் ஆகும். மாணவிகள் 90.68 சதவீதம் பேரும், மாணவர் கள் 84.67 சதவீதமும், திருநங் கைகள் 60 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத் துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 14 லட்சத்து 35 ஆயிரத்து 366 பேர் தேர்வு எழுதி யதில், 13 லட்சத்து 30 ஆயிரத்து 662 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதாவது, 92.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தைவிட இந்த ஆண்டு 5.38 சதவீதம் குறைவு ஆகும். நாடு முழுவதும் 16 மண் டலங்களாக தேர்வு மய்யங்கள் பிரிக்கப்பட்டு சி.பி.எஸ்.இ. தேர்வு நடத்தப்படு கிறது. அதன்படி, மண் டல வாரியான தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில், திருவனந்தபுரம் 99.91 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத் தபடியாக, 98.64 சதவீதம் தேர்ச் சியுடன் பெங்களூரு மண்டலம் 2-ஆவது இடத்திலும், 97.4 சதவீதம் தேர்ச் சியுடன் சென்னை மண்ட லம் 3-ஆவது இடத்திலும் உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களில் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 22 ஆயிரத்து 622 பேர், 90 சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் பெற்றவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 838 பேர் ஆவார்கள்.

10-ஆம் வகுப்பு

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 21 லட்சத்து 65 ஆயி ரத்து 805 பேர் எழுதினார்கள். அவர்களில், 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.12. இதில் மாணவிகள் 94.25 சதவீத மும், மாணவர்கள் 92.24 சதவீதமும், திருநங்கைகள் 90 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டில், 20 லட்சத்து 93 ஆயி ரத்து 978 பேர் எழுதி யதில், 19 லட்சத்து 76 ஆயிரத்து 668 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இதன்படி பார்க்கையில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 1.28 சத வீதம் குறைவு ஆகும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை போல, மண்டல வாரியான 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத் தில் திருவனந்த புரம் 99.91 சதவீதத்துடன் முதலி டத்திலும், 99.18 சதவீதம் தேர்ச்சி யுடன் பெங்களூரு 2-வது இடத்தி லும், 99.14 சதவீதம் தேர்ச்சியுடன் சென்னை 3-ஆவது இடத்திலும் இருக்கின்றன. தேர்ச்சி அடைந்த வர்களில் 44 ஆயிரத்து 297 பேர் 95 சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் ணும், 1 லட்சத்து 95 ஆயி ரத்து 799 பேர் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றி ருக்கின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் 12ஆம் வகுப் பில் 6.01 சதவீதமும், 10-ஆம் வகுப் பில் 1.98 சதவீதமும் மாணவிகள், மாண வர்களை காட்டிலும் அதிகமாக தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விவரம்

சி.பி.எஸ்.இ. 12ஆ-ம் வகுப்பு தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 34 ஆயிரத்து 613 மாணவர்கள், 28 ஆயிரத்து 925 மாணவிகள் என மொத்தம் 63 ஆயிரத்து 538 பேர் எழுதியதில், 33 ஆயிரத்து 951 மாணவர்கள், 28 ஆயிரத்து 646 மாணவிகள் என மொத்தம் 62 ஆயிரத்து 597 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.52 ஆகும். அதேபோல், 10ஆ-ம் வகுப்பு தேர்வை 47 ஆயிரத்து 430 மாணவர்கள், 39 ஆயிரத்து 315 மாணவிகள் என மொத்தம் 86 ஆயிரத்து 745 பேர் எழுதியதில், 47 ஆயிரத்து 260 மாணவர்கள், 39 ஆயிரத்து 247 மாணவிகள் என 86 ஆயிரத்து 507 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.73 ஆகும்.ஒட்டுமொத்த தேர்ச்சி பட்டியலில் 12-ம் வகுப்பில் தமிழ்நாடு 3-வது இடத்திலும், 10ஆம் வகுப்பில் 2-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. சி.பி.எஸ்.இ. வாரியம் மதிப்பெண்ணில் முதல் இடம், 2ஆவது இடம், 3ஆவது இடம் பெற்ற மாணவ-மாணவிகள் விவரத்தை வெளியிடுவது இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பில் 2 மாணவிகள் 498 மதிப்பெண் பெற்றதாகவும், 12-ஆம் வகுப்பில் ஒரு மாணவி 496 மதிப்பெண் பெற்று இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன


No comments:

Post a Comment