முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு

சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண் டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக் கும் கப்பல் விடப்பட உள்ளது.

இதற்கான கட்டுமானப் பணி கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கியது. இந்த கப்பல் கட்டுமானப் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய் தார். தொடர்ந்து, படூர் புறவழிச்சாலையில் உள்ள அர சுக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலத்தையும் அவர் ஆய்வு செய்தார். அந்த இடத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா, நடைபாதை, விளையாட்டு மைதானம் அமைத்து முட்டுக்காடு படகுத்துறையுடன் இணைக்க வாய்ப்புள் ளதா எனவும் அதிகாரிகளுடன் விவாதித்தார். பிறகு, இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் படும். அதன் பின்னர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத் தப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருப்போரூர் சட்ட மன்ற உறுப் பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் இதய வர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், முட்டுக்காடு படகு குழாம் உதவி மேலாளர் பாஸ்கரன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment