பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்ததில் என்ன தவறு? உயர் நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்ததில் என்ன தவறு? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப். 28- பொது மக்களைக் காப் பாற்றும் வகையில், தமிழ் நாடு அரசு ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதி மன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின் சட்டத் துக்கு தடை விதிக்க முடியாது என்று மறுப் புத் தெரிவித்து, விசார ணையை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன் லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளை யாட்டுகள் முறைப்படுத்தல் சட் டத்தை எதிர்த்து, 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவ னங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குகள் தொட ரப்பட்டன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற் றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (27.4.2023) விசார ணைக்கு வந்தன.

அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக் குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, "ஏற் கெனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விதிகளை அறிவித்த அடுத்த நாள், தடை சட்டத் துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித் துள்ளார்.

இவ்வாறு தடை விதித்து சட்டம் இயற்ற, மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆன்லைன் ரம்மியை திறமைக்கான விளையாட்டு என்று நீதிமன்றங்கள் ஏற்கெ னவே தெளிவுபடுத்தி யுள்ள நிலையில், தமிழ் நாடு அரசின் தடை சட்டத்தில் ரம்மி விளை யாட்டு, “நல்வாய்ப்பான விளையாட்டாக வகைப் படுத்தப்பட் டுள்ளது.

 எனவே, ஆன்லைன் ரம்மியை இந்த சட் டத்தின் கீழ் தடை செய்ய முடியாது. மது பானமும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது தான். அதற்காக தமிழ் நாடு அரசு மதுபா னத்துக்கு தடை விதித்து விட்டதா" என்று வாதிட்டார். 

ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் சி.ஆர்யமா சுந்தரம், "1930ஆம் ஆண்டு தமிழ்நாடு விளை யாட்டுச் சட்டத்தில் இணையதளத்தைச் சேர்த்து 2021இல் கொண்டு வரப்பட்ட தடை சட்டம் ரத்து செய் யப்பட்டது.

அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இது வரை எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்குப் பதிலாக புதி தாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ் வாறு ஒட்டு மொத்தமாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எந்த அதிகார மும் இல்லை. ரம்மி, போக்கர் போன்ற திற மைக்கான விளையாட் டுகளை, சூதாட்டமாக கருத முடியாது.

அவை நல்வாய்ப்பான விளையாட்டுகள் அல்ல. திறமைக்கான விளை யாட்டுகளை முறைப் படுத்த மட்டுமே முடி யுமே தவிர, அவற்றுக்கு தடை விதிக்க முடியாது. தற்போது அய்பிஎல் போட்டிகளுக்கும் கூட `ட்ரீம் 11' என்ற ஆன்லைன் விளையாட்டு உள்ளது. 

எனவே, தற்போதைய சூழலில் கடும் நடவடிக் கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்" என்றார். மற் றொரு ஆன்லைன் நிறுவ னம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன், "மக்க ளின் பணத்தைப் பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும்.  பங்குச் சந்தை யில் ஏற்படும் இழப்பாலும், மரணங்கள் ஏற் படுகின்றன. அதற்காக பங்குச் சந்தை வணிகத் துக்கு தடை விதிக்க முடி யுமா?" என்று வாதிட்டார்.

ஒன்றிய அரசுக்கு 

அதிகாரம் இல்லை

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜ ரான மூத்த வழக் குரைஞர் கபில்சிபல், ‘‘ஆன் லைன் சூதாட் டத்தை தடை செய்து சட்டம் இயற்ற தமிழ் நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

இது தொடர்பாக சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் கிடையாது. ஏனெ னில், இது மாநிலம் சார்ந்த பிரச் சினை. மாநில அரசு சட்டம் இயற்றி ஆன்லைன் விளை யாட் டுகளை தடை செய்து விட்டால், அதை வலை தளத்தில் இருந்து நீக்க வேண்டிய பொறுப் புதான் ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஆன் லைன் ரம்மியால் தமிழ் நாட்டைச் சேர்ந்த அப் பாவி இளை ஞர்கள் பலர் லட்சக்கணக் கில் பணத்தை இழந்து, தற் கொலை செய்து கொண் டுள்ளனர். அவர்களின் குடும்பம் நடுத் தெருவில் நிற்கிறது.

அந்த குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப் பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது" என்றார். அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதி பதி டி.ராஜா, "மதுரை அருகே உள்ள எனது ஊரான தேனூரில் இன் றும் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ கூடாது என்று தடை உள்ளது. 

ஏற்கெனவே தமிழ் நாட்டில் குதிரைப் பந்த யம், லாட்டரிச் சீட்டு போன்ற வற்றுக்கு தடை உள்ளது. 

அது போலத்தான் இது வும். சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஆன் லைன் விளையாட்டுக ளால் ஏற்படும் மர ணங் கள், அந்தக் குடும்பங் களின் சூழல் உள்ளிட்ட விபரீதத்தை நன்கு உணர்ந்து, பொது மக் களைக் காப்பாற்ற தமிழ் நாடு அரசு ஆன்லைன் சூதாட் டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், மக்கள் நலன்தான் முக்கியம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகா ரத்தில் தமிழ்நாடு அர சின் பதிலைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தர வும் தற்போதைய சூழலில் பிறப்பிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக் கில் தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment