பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சமூகப் பணித்துறை சார்பாக கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் மற்றும் சமூகப் பணித்துறை சார்பாக கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர், ஏப்.26- பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் சமூகப்பணித்துறை மற்றும் HOPEதொண்டு நிறுவனம் இணைந்து புதுக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நி.20 விழப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் PM - JAY.20  மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் பதிவு முகாம் நடைபெற்றது.

இதில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி செல்வி வெற்றி வரவேற்புரை வழங்கினார். இந் நிகழ்விற்கு புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் அன்பரசு இளவரசன் தலைமை உரை வழங் கினார்.

அவர் தமது உரையில் PM-JAY.20  திட்டத்தை பற்றி மக்கள் இடத்தில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஷி.ஞானராஜ் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் G.20 PM - JAY.20  திட்டத்தின் முக்கிய கூறுகளை பற்றி எளிய முறையில் மக்களிடத்தில் எடுத்துரைத்தார். 

அடுத்ததாக HOPE  தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் செல்வி பிரசி பாராட்டுரை வழங்கினார். அவர்  G.20 PM - JAY.20  திட்டத்தின் நோக்கத்தை பற்றியும் பயனைப் பற்றியும் மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.

 இதில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண் டனர். அதில் 65 நபர்கள் PM-JAY. திட்டத்தால் பயனடை யும் விதமாக பதிவு செய்து தரபட்டது. 

இறுதியாக சமூகப் பணித் துறையின் முதலாம் ஆண்டு மாணவி செல்வி சஹானா.ரா நன்றியுரை வழங்கினார். 

தஞ்சாவூர். தெற்கு பாளையப்பட்டி 20.04.2023

பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் சமூகப் பணித் துறை மற்றும் சைல்டு லைன் நோடல் அமைப்பின் சார்பாக ஜி.20 விழிப்புணர்வு நிகழ்ச்சி ""ஒரு பூமி ஒரு குடும்பம்"" ஒரு எதிர்காலம் என்ற தலைப்பில் தெற்கு பாளையப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப் பெற்றது. தெற்கு பாளையப்பட் டியின் பஞ்சாயத்து தலைவர் கமலதாசன் அவர் தம் தலைமை உரையில்:-

கிராம வளர்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மாணவர் கள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தால் கட்டட எழில்கலை துறை இணைப் பேராசிரியர் கவிதா சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில்:-

ஜி.20 உச்சி மாநாட்டில் தலைவர்கள் உணவுப் பாது காப்பு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தகவல்கள், அவற்றை எப்படி சமாளிப்பது மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து விவா திக்கப்படுகின்றது என்றும் இதில் 20 நாடுகள் உறுப்பினர் களாக உள்ளதாகவும். இதில் ஜி-20க்கு அய்ந்தாவது நாடாக இந்தியா இம்முறை தலைமை வகிப்பதாக கூறினார். தொடர்ச் சியாக சுகாதாரமும், சுற்றுச் சூழ லையும் தொழில் நுட்பம் வழி யாக எவ்வாறு குறைந்து காலகட்டத்தில் மேம்படுத்த லாம் என்று கூறினார். அதனை தொடர்ந்து சைல்டுலைன் நோடல் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் தனபால் அவர்கள் கருத்துவீர வழங்கினார். அவர் தமது உரையில்:- குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும் போக்சோ சட்டத்தை பற்றியும் விரிவாக கூறினார். இறுதியாக தெற்கு பாளையபட் டியின் அரசு நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியை கார்த்தியாயிணி வாழ்த்துரை வழக்கினார். 

பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சமூ கப்பணித்துறை இணை பேராசி ரியரும், பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அவர்களின் ஆலோச னைப்படி 18.04.2023 அன்று சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி செல்வி வெற்றியும் 20.04.2023 அன்று சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவன் ச.பவுஸ்டினும் நிகழ்ச் சியை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment