குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரி

திருவள்ளூர்,ஏப்.18- ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரிடம் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வலியுறுத்தும் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பல தரப்பிரிலிருந்தும் அவருக்கு பாராட்டு குவிகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர் பேட்டை கிராமத்தில் அமைந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரி யராக இருப்பவர் பியூலா. இவர் பணியாற்றி வரும் பள்ளி யில் 50 மாணவ மாணவியர்கள் கல்வி கற்று வந்தனர். தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் இன பழங்குடியினர் வசிக் கும் திடீர் நகர் பகுதியில் இருந்து 11 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுவிட்டனர். இந்த நிலையில் தலை மையாசிரியை வைத்த கோரிக்கையை ஏற்று பென்னலூர் பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் திடீர் நகர் பகுதிக்கு நேரடியாக சென்று பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோர் களிடம் கல்வி குறித்து முழு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் “பள்ளிகளில் 5 நாட்கள் முட்டை போடுறாங்க, 2 நாள் பயறு போடுறாங்க. உணவுக்கு பிரச்சினை என்றால் என்னை வந்து பாருங்கள். தவறு செய்தால் கூட விட்டு விடுவேன்.. படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற் றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப் புங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்” என காவலர் கூறினார். பெற்றோர் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் பள்ளிக்கு சென்று இறுதித் தேர்வை எழுத உதவி புரிந்துள்ளார் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மாணவ, மாணவியர் களின் கல்வி எதிர்காலத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் தற்போது இடையில் கல்வியை நிறுத்திய மாணவ, மாணவியர்கள் மீண்டும் தங்களது கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது என அப்பள்ளி தலை மையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவன் மேற்கொண்ட நூதன விழிப்புணர்வு காட்சிப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனை வரின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment