மே 7 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

மே 7 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாடு: களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரம்

சென்னை, ஏப். 27- திராவிடர் தொழிலாளர் அணியின் நான்காவது மாநில மாநாடு 7.5.2023 அன்று முழுநாள் மாநாடாக தாம்பரத்தில் நடைபெறுகிறது. 

7.5.2023 அன்று காலை நிகழ்வாக கருத்தரங்கமும், அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற திறந்தவெளி பொது மாநாட்டுக்குத் தலைமையேற்று திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்கின்றனர். 

தொழிலாளரணி மாநில பொறுப்பா ளர்கள் மாநாட்டுப்பணியில் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடெங்கும்  மாநாடு குறித்த சுவ ரெழுத்துப் புரப்புரையை கழகப் பொறுப் பாளர்கள் பெரிதும் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள்.

மாநாட்டில் தொழிலாளர்களின் கோரிக் கைகள், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள்குறித்து அனுப்பிடுமாறு திராவிடர் தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் மு.சேகர் தோழர்களிடம் கோரியுள்ளார். திராவிடர் தொழிலாளர் அணி, அமைப்புசாரா தொழிலாளர் அணித் தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள்,  இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் என கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மாநாட்டுக்குத் திரளாக வருவது குறித்து அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி பெருவாரியாக மாநாட்டில் பங்கேற்ப தென தீர்மானித்துள்ளார்கள்.

கழகத்தின் மாவட்டங்கள் தோறும் உள்ள தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க தாம்பரம் நோக்கி திரள்கிறார்கள்.

திராவிடர் தொழிலாளரணி  மாநில செயலாளர் மு.சேகர் மற்றும் பொறுப் பாளர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள கழகப் பொறுப்பாளர்களின் உறுதுணை யுடன் மாநாட்டுப் பரப்புரையை மேற் கொண்டு வருகிறார்கள்.

தொழிலாளர் அணி தோழர்கள், கழகப்பொறுப்பாளர்கள் மாநாடு குறித்த பரப்புரையில் மாநாட்டின் நோக்கத்தை விளக்குகின்ற பரப்புரை  துண்டறிக்கை களை பொதுமக்களிடம்  வழங்கி வரு கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது,

மே 7 அன்று திராவிடர் தொழிலாளரணி மாநில மாநாடு

அருமைப் பெருமக்களே! வணக்கம்.

வரும் மே 7 ஞாயிறன்று திராவிடர் தொழிலாளர் கழக 4ஆவது மாநில முழு நாள் மாநாடு தாம்பரம் நகரில் நடை பெறவுள்ளது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை யில், திராவிடர் கழகமே ஒரு தொழிலா ளருக்கான அமைப்புதான் - இயக்கம்தான்!

வருண தருமத்தின் அடிப்படையில் நான்காவது வருணத்தவர் என்று கூறி சூத்திரர்களாகவும் அதற்கும் கீழ் பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட நாட்டின் பெரும்பான்மையான மக்கள், பிறவி அடிமைகளாக நிந்திக்கப்பட்டவர்கள் தானே! சூத்திரர்கள் என்று சொல்லும் பொழுது அவர்கள் ஏழு வகைப்படும் தொழிலாளர்கள் என்று மனுதர்மம் கூறுகிறதே! (மனுதர்மம்-அத்தியாயம் 8, சுலோகம் 415)

உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவே எல்லா வகையிலும் பாடுபடும்-போராடும் திராவிடர் கழகம் அடிப்படையில் தொழி லாளர்களுக்கான அமைப்புதானே! இத் தகைய கழகத்தின் தொழிலாளர் அணி மாநாடு என்றால் அது தனித்தன்மையான ஒன்றே!

தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் பிரச்சினைகளும், உரிமை மறுப்புகளும் எழுத்தில் அடங்கா!

நாம் நடத்த இருக்கும் தாம்பரம் தொழிலாளர் அணி மாநில மாநாடு - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

முற்பகல் கருத்தரங்கம் - மாலை திறந்த வெளி பொது மாநாடு!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்கிறார்.

அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட் சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

“முதலாளி- தொழிலாளி என்பதே ஒழிக்கப்பட்டு இருவரும் பங்காளிகளாக வேண்டும்!"

என்ற தந்தை பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்துவோம்!

பணி முடிப்போம்!!

மாநாடு வெற்றி பெற தாங்கள் வருகை தருவதோடு, நன்கொடையை அளித்து ஊக்குவிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என திராவிடர் தொழிலா ளர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட பரப் புரைத் துண்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரம் உள்ள ஆணவத்தில் ஆர்.எஸ்.எஸ்.,-ஹிந்த்துவா வாதிகள்  சனாதனம் என்று ஏதோ அற்பு தத்தைக் கண்டு பிடித்ததைப் போல கூறிக் கொண்டு இன்னமும் மநுதர்மத்தைத் திணிப்பதற்கு ஆலவட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்கள் என்ற போர்வையில்  ஆதிக்கத்தைத் தொடர்ந் திட ஆரியக்கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தை ஏய்த்துப்பிழைக் கின்ற, வந்தேறிக் கூட்டமான பார்ப்பனர் கள் காலம் காலமாக உழைப்பைச் சுரண்டி வருவதுடன், உழைக்கும் மக்களை சூத் திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தி யும் வந்துள்ளனர். 

ஜாதி இழிவுகளை அறவே ஒழித்து, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும்  கிட்டிட, மனித சமூகத்துக்குள் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல், சம உரிமை, சம நீதி, சமூக நீதி சமுதாயத்தைப் படைத்திட திராவிடர் கழகம் களம் பல கண்டு வருகி றது. மனித உரிமைகளை மீட்டு வருகிறது.

போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து, மீண்டும் இழிநிலைக்கு நம் மக் களைத் தள்ளி, பழைய  அவல நிலை தொடர்ந்திட நரித்தனங்கள் ஆட்சி அதி காரங்களுடன் எட்டிப்பார்க்கின்றன.

‘திராவிட மாடல்’ ஆட்சியில் அவ்வப் போது நரியின் வால் நறுக்கப்பட்டு வரு கிறது. சமூக நீதியை நிலைநாட்டிட, உழைப் போருக்கே இந்த உலகம் என்பதை நிலை நாட்டிட  திராவிடர் தொழிலா ளரணி நான்காவது மாநில மாநாடு மே 7இல் தாம்பரத்தில் கூடுகிறது.

களப்பணியில் கழகப்பொறுப்பாளர் கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment