நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு

சென்னை,ஏப்.13-  நிலச்  சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை, 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் பெறலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் நேற்று (12.4.2023)  புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆன்லைன் மூலம் இதர சான்றிதழ்களும் வழங்கப்படும்

வருவாய்த்துறையில் வழங்கப் படும் இதர சான்றிதழ்கள் அனைத் தும் இணையவழியில் பெறலாம்.

ஏற்கனவே 25 வகையான சான் றிதழ்கள் மற்றும் சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது.

பதிவுபெற்ற சுய உதவிக் குழுக் களுக்கு குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை

தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்க ளுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணமாகாத மகள்கள், திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும்.

இடம் சார்ந்த நில ஆவணங் களின் விவரங்களை அறிய புதிய செயலி உரு வாக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் புதிய நிலநடுக்க கண்காணிப்பு  நிலையம்

தமிழ்நாட்டில் புதிதாக நில நடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பேரிடர் காலங்களில் தடையற்ற தொலை தொடர்புக்கு 31 மாவட்டங்களில் டிஜிட்டல் ரிப்பீட்டர் மேம்படுத் தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கொள்ளிடம் ஆற்றின் இடதுகரை பலப்படுத்தப்படும்

கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற் றின் இடதுகரை ரூ.14.50 கோடியில் பலப்படுத்தப்படும் என்று அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூறியுள் ளார். வெள்ள பாதிப்பில் இருந்து தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை பலப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை திருமயிலாடி, முதலைமேடு கிரா மங்களில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மய்யங் கள் அமைக்கப்படும். பேரிடர் முன்னறிவிப்பு குறித்து அறிய ஜிழி-கிறீமீக்ஷீt மற்றும் ஜிழி-ஷிவிகிஸிஜி என்ற புதிய செயலி ரூ.12.50 கோடியில் செயல் படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா 

ஈரோடு, தஞ்சை, கரூர், திருப் பத்தூர் மாவட்டங்களில் 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவ ரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும். முதியோர் உத வித்தொகை நிறுத் தப்பட்டவர் களுக்கு ஆய்வு மேற்கொண்டு விரைவில் மீண்டும் வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment