கூட்டப்பட்ட அமித்ஷா கூட்டத்தில், வெயிலின் கொடுமையில் 15 பேர் மரணம், 110 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

கூட்டப்பட்ட அமித்ஷா கூட்டத்தில், வெயிலின் கொடுமையில் 15 பேர் மரணம், 110 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

மும்பை, ஏப். 18- நீரின் கொதிநிலை அளவு உள்ள வெயிலில் லட்சக்கணக்கானோரை வெட்டவெளியில் அமரவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிக்கொண்டு இருந்த போதே கொத்து கொத்தாக செத்து விழுந்தனர்.

இதைப் பொருட்படுத்தாமல் அமித்ஷா, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.  மகாராட்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதி காரிக்கு அரசு விருது (மகா ராட்டிரா பூஷன் விருது) வழங்கும் விழா நடந்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று விருது வழங்கினார். மகாராட்டிர முதலமைச்சர் ஷிண்டே மற்றும் பட்நாவிஸ் பங்கேற்றனர்.

நவி மும்பையில் உள்ள பிர மாண்ட மைதானத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்களை பாஜக அருகில் உள்ள ஊரில் இருந்து வாகனங்களில் வரவழைத்து திறந்தவெளி மைதானத்தில் அமர வைத்திருந்தனர்.

மகாராட்டிரா மாநிலத்தில் அதிகாலையிலேயே 30 டிகிரி வெயில் தற்போது உள்ளது. இந்த நிலையில் காலையில் நடக்கவிருந்த நிகழ்ச்சி மதியம் 11 மணிக்கு துவங் கியது. அப்போது அப்பகுதி வெப்ப நிலை 38 ஆக இருந்தது, 12 மணிக்கு அங்கு வெப்பம் நீரின் கொதிலைக்குச் சென்றது.

இதனால் அங்கு அமர்திருந்த மக்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்தனர்.  இது எதையும் பொருட்படுத்தாமல் அமித்ஷா தொடர்ந்து பேசிகொண்டு இருந்தார்.

இந்த நிலையில் மயங்கிவிழுந்த 15 பேர் நிகழ்விடத்திலேயே மரண மடைந்தனர்.  110க்கும் மேற்பட் டோர் கடுமையான பாதிப்புடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் கோமா நிலைக்குச் சென்று விட்ட தாக உள்ளூர் ஊடகம் கூறியுள் ளது. மகாராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவம னைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த சம்பவம் மகாராட்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment