ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகள் அமல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகள் அமல்

புதுடில்லி, மார்ச் 9 ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகளை  இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ரயில் பெட்டிகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,  ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ரயிலில் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.   மிஸிசிஜிசி ஆன்-போர்டு ஜிஜிணி (பயணச்சீட்டு பரிசோதகர்), கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ரயில்களில் பொது ஆசாரம் மற்றும் மக்களுக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள், இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணியும் சத்தமாக அலைபேசியில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இயர்போன் இல்லாமல் அதிக டெசிபலில் எந்தப் பயணியும் இசையைக் கேட்கக்கூடாது. இரவு விளக்கு தவிர, இரவு 10 மணிக்குப் பிறகு எந்தப் பயணிகளும் விளக்குகளை எரிய வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் அய்.ஆர்.சி.டி.சி வெளியிட்ட இரவு 10 மணிக்குப் பிறகான விதிகள்: இரவு 10 மணிக்குப் பிறகு, பயணிகளின் பயணச்சீட்டை பார்க்க ஜிஜிணி வர முடியாது. இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு அரட்டை அடித்து பேசக்கூடாது. மிடில் பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையைத் திறந்தால், கீழே உள்ள சக பயணிகள் எதுவும் சொல்ல முடியாது. ரயில் சேவைகளில் இணையதள ஆர்டர் மூலம் இரவு 10 மணிக்குப் பிறகு உணவு வழங்க முடியாது. இருப்பினும், இரவிலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் ரயிலில் உங்கள் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். 

அய்ஆர்சிடிசி-ன் லக்கேஜ் விதி: ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும் மற்றும் இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் பயணிகள் இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம். ஏசி வகுப்பில் கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன், பயணிகள் 150 கிலோ, ஸ்லீப்பரில் 80 கிலோ, மற்றும் இரண்டாவது உட்கார்ந்து 70 கிலோ பை மற்றும் சாமான்களை எடுத் துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment