ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் படம் பார்க்க தடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்கள் படம் பார்க்க தடுப்பு

இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு

சென்னை, மார்ச் 31 நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனும திக்காத ரோகிணி திரையரங்க ஊழி யர்கள் இருவர் மீது தாழ்த்தப்பட்டோர், பழங்கடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கவதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்து தல' திரைப்படம்   மார்ச் 30களில் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் கையில் நுழைவுச் சீட்டு வைத்திருந்தும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காட்சிப் பதிவுக் காட்சியும் வெளியானது. இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில், 'பத்து தல' படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதலில் கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைந்தகரை வட்டாட்சியர் திரையரங்கில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, பயணச் சீட்டு இருந்தும் ரோகிணி திரையரங்குக்குள் படம் பார்க்க அனுமதிக்காத பயணச்சீட்டு  பரிசோதகர்கள் ராம லிங்கம் மற்றும் குமரேசன் மீது தாழ்த் தப்பட்டோர் / பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment