தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: திறன் பயிற்சி தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: திறன் பயிற்சி தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 27- பொறியியல் கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்க ளுக்கு அரசின் சார்பில் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சிகள் வழங் கப்படவுள்ளன.

இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்குநர கம் சார்பில் அனைத்து பொறியியல் கல்லூரிக ளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற் றறிக்கை: கல்லூரிகளில் இறுதியாண்டு இள நிலை, முதுநிலை பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங் குடியின  மாணவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற மொழித்திறன், திறனறிவு மற்றும் குழு விவாதம் குறித்த பயிற்சிகள் தேவைப் படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அந்த மாணவர்களுக்கு திறன் சார் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திறன் பயிற்சிகள் தாட்கோ சார் பில் வழங்கப்படவுள்ளது. 

இணையதளத்தில் பதிவு 

தகுதியான மாணவர் கள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை,பிளஸ் 2 மதிப் பெண் பட்டியல், கடைசி பருவத் தேர்வு மதிப் பெண் பட்டியல் ஆகிய வற்றுடன்  http://tahdco.com/ / என்ற இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்வதற்கு அனைத்து கல்லூரி முதல்வர்களும் தங்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் பதிவு செய்த மாணவர் களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment