தமிழர்களின் நாகரிகத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் நெல்லை மாவட்ட ஆட்சியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

தமிழர்களின் நாகரிகத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி, மார்ச் 25- பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி 23.3.2023 அன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மக்களும், மாணவர்களும் சிந்தனைகளை சீர்திருத்தி பார்க்கும் குணம் உள்ளவர்கள். இந்த மாவட்டத்தில் 22 சாகித்ய அகாடமி விருது பெற்ற வர்களும், அதிகமான எழுத்தாளர்களும் உள்ளனர்.

தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மிகவும் தூய்மை யானது. அதனை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தையும், வரலாற் றையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மெய்யியலாளர் கரு. ஆறுமுகத்தமிழன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்வின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத் தாளர் வண்ணதாசன், கல்லூரி முதல்வர் உஷா காட்வின், துணை முதல்வர் வளர்மதி, பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சவுந்தர மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment