20.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என அகிலேஷ் பேசியது சரியே, என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த, இந்தியா முழுமையும் உள்ள 13000 கிராமங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் கவனம் செலுத்தி, பிற்படுத்தப்பட்டோர் வாக்கினை கவர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். திட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சவர்க்கார் அல்ல மன்னிப்பு கோருவதற்கு; - இது ராகுல் காந்தி - என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக மற்றும் வலதுசாரி குழுக்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆதரிக்கும் சாமியார்கள் நடைப் பயணம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் இந்து வாக்குகளை கவரும் ஒரு நடவடிக்கையாக ஹிந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment