சிதம்பரம் கழக மாவட்டம், வலசக்காடு கழகத் தோழர், அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ம.கோவிந்தசாமி நினைவேந்தல் படத்திறப்பு 12.3.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு வலசக்காட்டில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன் வரவேற்புரையாற்ற, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில், திருமுட்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்க.ஆனந்தன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மேனாள் ஒன்றிய திமுக செயலர் தங்க.நாகரத்தினம், திமுக மணி என்கிற சேகர் ஆகியோர் உரையாற்றினர். திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment