"ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு!" நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

"ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு!" நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்

புதுடில்லி,மார்ச்23- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு உண்டு என ஒன்றிய அரசு விளக்கமளித் திருக்கிறது. 

சேலம் மக்களவை திமுக உறுப்பினர் பார்த்திபன் மக்களவையில் இது தொடர்பாக கேள்வியெ ழுப்பினார். 

ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் எழுத் துப்பூர்வ அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகிய இரண்டுமே அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட் டங்களை தடுப்பதற் குரிய சட்டங்களை இயற்றுவ தற்கும், அவற்றை தங்களது வரம்பிற்குள் கொண்டு வருவ தற்கும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

ஏற்கெனவே சில மாநி லங்களில் இதுபோன்ற சட் டங்கள் இருந்து வரு கின்றன. திறமை அடிப்படையிலான விளையாட்டு, வாய்ப்பு மற்றும் ஏதோ வெற்றி வாய்ப்பு அடிப்படையிலான விளை யாட்டு ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளது.

திறமை சார்ந்த விளையாட் டுகளில் வெற்றி பெறுவதற்கு ஓரளவு திறன் தேவைப்படும். 

ஆனால், பெரும்பாலும் வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு களை 'சூதாட் டம்' என்று தான் இந்திய சட்டங்கள் கருதுகின்றன. இவ் வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment