தமிழ்நாடு - கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

தமிழ்நாடு - கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா!

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத் தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதான பிறகு - இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று போராடினார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

''அந்தப் போராட்டம்தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம்'' என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.

கேரளாவில் இருந்து வந்திருக்கக்கூடிய  முதல மைச்சர், நம்முடைய மரியாதைக்குரிய மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுவோம் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

- தோள்சீலைப் போராட்ட 200 ஆவது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


No comments:

Post a Comment