கருநாடக மாநில தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

கருநாடக மாநில தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டதாரிகளுக்கு மாதம்

ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை : ராகுல் காந்தி வாக்குறுதி

பெங்களூரு மார்ச் 21 கரு நாடக சட்டப்பேரவைத் தேர் தலில் வென்று காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் வேலையில்லா பட்ட தாரி இளைஞர்க‌ளுக்கு மாதந் தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப் படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 

கருநாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க் கட்சியான காங்கிரஸ், மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடு கின்றன. இந் நிலையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேற்று (20.3.2023) பெலகாவி யில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங் கினர்.

அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 

''கருநாடக பாஜக ஆட்சி நாட்டிலேயே ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. எல்லா துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகின்றனர். இதனால் விவ சாயிகளும் ஏழைகளும் பெண் களும் பாஜக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்ற னர். தாழ்த்தப்பட்டோரும், சிறு பான்மையினரும் பாஜக ஆட்சி யில் வெகுவாக பாதிக்கப்பட் டுள்ளனர். அனைத்து தரப்பின ரும் அதிருப்தியில் இருப்பதால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது'' என்றார். 

பின்னர் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: கருநா டகாவில் இந்திய ஒற்றுமை பயணம்  மேற்கொண்ட போது ஏராள மான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரி இளை ஞர்களுக்கு தனியார் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உரு வாக்க முடிவெடுத்துள்ளோம். அதேபோல காலியாக உள்ள 2.5 லட்சம் அரசு வேலைகளை உடனடியாக நிரப்ப உள் ளோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரி இளை ஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப் படும். அதேபோல டிப்ளமோ, பாலிடெக்னிக் படித்த இளை ஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன். வறுமைக் கோட் டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டை தாரருக்கு ‘அன்ன பாக்யா' திட் டத்தின் கீழ் மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும். குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதே போல அனைத்து குடும்பத்தினருக்கு ம் 200 யூனிட் இலவச மின் சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment