தமிழ்நாட்டில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தமிழ்நாட்டில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு

 சென்னை,மார்ச்18- தமிழ்நாட்டில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 56 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறார்கள். இதில், 28 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3 பேர் உள்பட மொத்தம் 19 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் 19 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment