குரூப் 4 பதவிகள் - காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

குரூப் 4 பதவிகள் - காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு

சென்னை,மார்ச்22- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங் கள் 10,117 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறை களில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ. ஓ. பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 24.7.2022 அன்று நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியி டங்களுக்கு நடைபெற்றது.

இந்தநிலையில், சமீபத் தில் அரசு துறைகளில் பல் வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட் டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித் துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியி டங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட் டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து, திருத்தப்பட்ட அறி விக்கை அதிகரிப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. திருத்தப்பட்ட அறி விப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274இல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணி யிடங்கள் 3593லிருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியி டங்கள் எண்ணிக்கை 2,108 இல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம், சிறு பான்மையினர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப் பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குரூப் 4 தேர்வு குறித்து வெளியிடப் பட்ட அறிவிப்பில், 7 ஆயி ரத்து 301 காலிப் பணியி டங்கள் இருப்பதாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில், அந்த காலிப் பணியிடங் களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து, 2 ஆயிரத்து 816 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பணியி டங்களாக தமிழ்நாடு பணியா ளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment