விக்டோரியா பொது அரங்கு: ரூ.32½ கோடியில் சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

விக்டோரியா பொது அரங்கு: ரூ.32½ கோடியில் சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின்

 சென்னை, மார்ச் 21- ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை ரூ.32லு கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் விக்டோரியா பொது அரங்கம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா பெயரால் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகரின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப் பட்ட இந்த கட்டடம் சேதமடைந்து காணப்பட்டது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் விக்டோரியா பொது அரங்க கட்டடத்தை ரூ.32.62 கோடியில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

அதன்படி, இந்த பணியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று  (20.3.2023) தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன் னிலை வகித்தனர். பின்னர் விக்டோரியா பொது அரங்கை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்பு, அங்கு மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்த காணொலிக் காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment