மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் சிலைக்கு முன் வரவேற்றனர். விருத்தாசலம் தொழில் அதிபர் அகர்சந்த் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் இயக்கத்தில் இணைந்த ஆண்டிமடம், விளாங்குடியைச் சார்ந்த புதிய இளைஞர்கள் தமிழர் தலைவரிடம் அறிமுகம். (28.3.2023 ஆண்டிமடம்). பெண்ணாடம் பகுதி தோழர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை எதிர்த்து கழகத் தோழர்களுக்காக வாதாடி வெற்றி பெற்ற வழக்குரைஞர் பழனியாண்டி அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். ஆசிரியர் தங்க சிவமூர்த்தி குடும்பத்தினர் சார்பில் நன்கொடை வழங்கினர்.
ஆவட்டி சரஸ்வதி அறிவாலயம் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற 'பெரியார் ஆயிரம்' போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி, ஆற்றல்அரசு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.




No comments:
Post a Comment