அதிர்ச்சி தகவல்ஏப்.1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

அதிர்ச்சி தகவல்ஏப்.1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வாம்

மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு இப்பொழுது மக்கள் உயிரிலும் விளையாடுகிறதா?

சென்னை, மார்ச் 30- ஏப்ரல் 1ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்து களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் மாற்றத்திற்கு ஏற்ப மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தும். மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரித்துள்ளதன் காரணமாக,  அத்தியாவசிய மருந்துகளாக  வகைப்படுத்தப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும்.

ஏனெனில், அரசாங்கத்தால் அறி விக்கப்பட்ட வருடாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் ஆண்டு மாற்றம் 12.12 ஆக அதிகரிக்கும் என்று மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணை யம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண் டின் அடிப்படையில் சதவிகிதத்தை அதிகரிக்கலாம். மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை உயர்த்த வேண் டும் என்று கோரிக்கை விடுத்து வருகின் றன. சுமார் 900 மருந்துகளின் விலை 12 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரிக்கலாம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலை, அனுமதிக்கப்பட்ட உயர்வை விட அதிகமாக அதிகரித்துள்ளது. பட் டியலில் இல்லாத விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். புதிய விலைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment