பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வல்லம். மார்ச்.11- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) 10.03.2023 அன்று மணியம்மையாரின் 104 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. 

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. 

பேராசிரியர்கள், மாணவர்கள் சூழ, பல்கலைக்கழக முகப்பில் உள்ள பெரியார் சிலைக்கும் அன்னை மணியம்மையார் சிலைக்கும் பல் கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பி னர் வீ.அன்புராஜ் மாலைகள் அணி வித்தார். காலை 10.00 மணிக்கு வள்ளுவர் அரங்கில் விழா நடை பெற்றது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு அனைத்து நிகழ் வுகளிலும் தனித்திறமைகளை வெளிப்படுத்தியதற்காக பரிசுகள் வழங்கப்பட்டது. 

வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி சிறப்புரை நிகழ்த்தினார். அன்னை மணியம்மையார் எளி மையான உருவம் கொண்டவர். ஆனால் வலிமையான தலைமை யோடு இயக்கத்தை நடத்தியவர். கடவுள் மறுப்புக் கொள்கையை உடைய இயக்கத்தின் தலைமை யேற்ற பெண் உலகிலேயே இவர் ஒருவர்தான். தந்தை பெரியார் நிகழ்த்திய உரைகளை முதலில் தொகுத்தவர் என்ற பெருமை அம் மையாரையே சாரும். பெரியார் பேசிய சொற்பொழிவின் சாரத்தை மனதிலே பதித்துக் கொண்டு எழுத்து வடிவில் எழுதியது அவரு டைய ஆற்றலைப் புலப்படுத்துகி றது. 1948 ஆம் ஆண்டிலேயே ஹிந் தித் திணிப்பை எதிர்த்துப் போராட் டம் நடத்தி சிறை சென்றவர் மணியம்மையார். பொது வாழ்வில் ஈடுபடுகின்ற எந்தப் பெண்மணியும் சந்திக்காத அவதூறுகளையும் வச வுகளையும் அய்யாவின் கொள் கைக்காக ஏற்றவர். அவருடைய சாதனை என்பது பொய்ப் பிரச்சா ரத்தை அலட்சியப்படுத்தி இலக்கு நோக்கி பயணம் செய்து பெரியா ரின் கொள்கைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு சென்று சேர்த் ததேயாகும் என்று விரிவாக எடுத் துரைத்தார். 

விழாவிற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமை வகித்தார். பதிவாளர் டாக்டர் பி.கே.சிறீவித்யா முன் னிலை வகித்தார். அன்னை மணி யம்மையார் குறித்து முதலாமாண்டு கல்வியியல் துறை மாணவர் வேல் முருகன், மாணவி ஹேன்லி அகேம் உரை நிகழ்த்தினார்கள். இளங் கலை வணிகவியல் இரண்டா மாண்டு மாணவர் ர.தரண்குமார் வரவேற்புரை நிகழ்த்த மின்னியல் மற்றும் தொடர்பியல் துறை இரண்டமாண்டு மாணவி சி.கண் மணி நன்றியுரையாற்றினார். துணை வேந்தர் செ.வேலுசாமி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் சி.நர்மதா, கல்விப் புல முதன்மையர் பேரா ஜார்ஜ், புல முதன்மையர் சி.செந் தமிழ்குமார், பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் நம்.சீனிவாசன் முதலியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment