ஈச்சங்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - பெரியார் படம் வழங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

ஈச்சங்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - பெரியார் படம் வழங்கல்!

தஞ்சாவூர், மார்ச் 8 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில்   பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு நடைபெற்ற பெரியார் 1000 வினாடி வினா போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்குப் பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் செந்தாமரை வழிகாட்ட லில் இந்நிகழ்விற்கு உதவி தலைமை ஆசிரியர் புத்தன் தலைமை வகித்தார். நெல்லுபட்டு அ.இராம லிங்கம் தேர்வு மய்ய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பெரியார் ஒளிப்படம் வழங்கினார்.    

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அ.ரகமதுல்லா வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசியதாவது:

பெரியார் 1000 வினாடி வினா பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. பெரியாரின் வாழ்க்கை வர லாற்றை அறிந்து கொண்டு மாணவர் சமுதாயம் முன்னேற வேண்டும் எனவும், எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்குப் பிறகு தான், பெரியார் ஏற் படுத்திய சமூக மாற்றத்தால் தான் இன்று பெண்கள் கல்வி சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு வகை யான சலுகைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளை முழுமூச்சாக கொண்டு வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் கருத்துகளை, மாணவ சமுதாயம் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.

தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற் கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், பாலசந்திரன், கணேசன் ஆகியோர் செய்திருந் தனர். நிறைவாக முதுகலை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment